இன பிரச்னைகள் அதிகரிப்பதற்குக் காரணம் மகாதீர்தான்! - அம்னோ முன்னாள் MP குற்றச்சாட்டு

top-news
FREE WEBSITE AD

கோலாலம்பூர், மே 23: மலேசியாவில் இன உறவுகள் மோசமடைந்ததற்கு முன்னாள் பிரதமர் டாக்டர் மகாதிர் முகமட்தான் காரணம் என்று அம்னோவைச் சேர்ந்த முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் தௌஃபிக் இஸ்மாயில் தெரிவித்துள்ளார்.

பொது மற்றும் தனியார் துறைகளுக்கு இடையே நெருக்கமான ஒத்துழைப்பை ஊக்குவிக்கும் மலேசிய நிறுவனங்கள் போன்ற கொள்கைகளில் கவனம் செலுத்தப்பட்ட மகாதீரின் முடிவு, ஒற்றுமையை மேம்படுத்துவதை நோக்கமாகக் கொண்ட பிற கொள்கைகளை பின்னுக்குத் தள்ளியது என்று தௌஃபிக் இஸ்மாயில் கூறினார்.

அன்றைய தலைவர்கள்  பல்லினத் தலைமையைக் கூட்டி, அன்றைய அழுத்தமான பிரச்சினைகளை யதார்த்தமான கண்ணோட்டத்தில் அணுகினர் என்று அவர் குறிப்பிட்டார்.

துங்கு அப்துல் ரஹ்மான், டான் செங் லாக் மற்றும் துன் வி.டி. சம்பந்தன் ஆகியோர் நமது நாட்டின் தந்தையர்களாகப் பரவலாகக் கருதப்படுகிறார்கள்.

மூவரும் ஒரு தேசபக்தி கூட்டணியை உருவாக்கி, தேசத்தைக் கட்டியெழுப்புவதில் தங்கள் சமூகங்கள் பங்களிப்பதை உறுதி செய்ததாகக் மலேசியாவின் இரண்டாவது துணைப் பிரதமர் டாக்டர் இஸ்மாயில் அப்துல் ரஹ்மானின் மகனான தௌஃபிக்  கூறினார்.

கொடுத்து வாங்கும்' மனப்பான்மையே அவர்களுக்கு வழிகாட்டும் சக்தியாக இருந்தது  என்று 1986 முதல் 1990 வரை சுங்கை மெந்தாவ் நாடாளுமன்ற உறுப்பினராக இருந்த அவர் FMT ஊடகத்திடம் இவ்வாறு தெரிவித்தார்.

மகாதீர் பதவியேற்ற 1981ஆம் ஆண்டுக்குப் பிறகு, ருக்கூன் நெகாரா உள்ளிட்ட இன ஒற்றுமை அடிப்படைக் கொள்கைகள் புறக்கணிக்கப்பட்டதாகவும், புதிய பொருளாதாரக் கொள்கை போன்றவை மலாய் ஆதிக்கத்தை வளர்க்கப் பயன்படுத்தப்பட்டதாகவும் தௌஃபிக்  குற்றம்சாட்டினார்.

சில சந்தர்ப்பங்களில், மே 13க்குப் பிந்தைய இந்தக் கொள்கைகள், தவறாகப் பயன்படுத்தப்பட்டன.

இனக் கலவரங்களுக்குப் பிறகு, பூமிபுத்ராக்களின் சலுகைகள், இஸ்லாம் மற்றும் மலாய் தேசிய மொழியாக இருக்கும் வகையில் கூட்டாட்சி அரசியலமைப்பு திருத்தப்பட்டது.

மகாதிர் ஒவ்வொரு துறையிலும் மலாய் ஆதிக்கத்தை உறுதிப்படுத்தியுள்ளார் என்று அவர் கூறினார்.

அண்மையில் மகாதீர் அளித்த பேட்டியில்,  நாட்டின் இனப் பிளவுகள் விரிவடைந்து வருவதாகவும், அவரது நிர்வாகக் காலத்தை விட இப்போது அதிகமாக இருப்பதாகவும் தெரிவித்திருந்தார். இதற்கான காரணமாக இன அடிப்படையிலான அரசியல் கட்சிகளை அவர் சுட்டிக்காட்டினார்.

அதற்குப் பதில் கூறும் விதமாக தௌஃபிக் இவ்வாறு தெரிவித்தார்!

Taufik Ismail menyalahkan Tun Mahathir sebagai punca keretakan hubungan kaum di Malaysia kerana mengabaikan dasar perpaduan dan mengutamakan dasar ekonomi yang memupuk ketuanan Melayu, sekali gus melemahkan keharmonian negara.

ITS AD

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *