ஜூன் 6ஆம் தேதி வெள்ளிக்கிழமை ஹஜ்ஜூப் பெருநாள் கொண்டாடப்படலாம்!

top-news
FREE WEBSITE AD

கோலாலம்பூர், மே 26 –

பெரும்பாலான இஸ்லாமிய நாடுகளில் வரும்  ஜூன் 6ஆம் தேதி  வெள்ளிக்கிழமை ஹஜ்ஜூப் பெருநாள் கொண்டாடப்படலாம்  என்று எதிர்பார்க்கப்படுவதாக அனைத்துலக வானியல் மையம் குறிப்பிட்டுள்ளது.

ஜுல்ஹிஜ்ஜா 1446எச் இன் தொடக்கத்தைக் குறிக்கும் பிறை நிலவு  வரும் மே 27ஆம் தேதி செவ்வாய்க்கிழமை தெரியும் என எதிர்பார்க்கப்படுவதாக அபுதாபியை தளமாகக் கொண்ட அந்த மையம் அறிவித்துள்ளது.மத்திய மற்றும் மேற்கு ஆசியாவின் சில பகுதிகளிலும் ஆப்பிரிக்கா மற்றும் ஐரோப்பாவின் பெரும் பகுதியிலும் தொலைநோக்கிகள் மூலம் பிறை நிலவைக் காண முடியும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த அடிப்படையில் மே 28ஆம் தேதி ஜுல்ஹிஜ்ஜா மாதத்தின் முதல் நாளாக இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

Pusat Astronomi Antarabangsa menjangkakan 1 Zulhijjah akan bermula pada 28 Mei, berdasarkan jangkaan rukyah pada 27 Mei. Oleh itu, Hari Raya Haji dijangka disambut pada 6 Jun di kebanyakan negara Islam.

ITS AD

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *