சீனா சென்ற பாகிஸ்தான் துணை பிரதமர்- வரவேற்காத சீனாவின் அமைச்சர்கள்!

top-news
FREE WEBSITE AD

பாகிஸ்தான் துணை பிரதமர் சீனாவுக்கு சென்ற நிலையில், அவரை வரவேற்க முக்கிய அதிகாரிகள் மற்றும் முக்கிய அரசியல் தலைவர்கள் யாரும் செல்லவில்லை என்றும், கீழ்நிலை அதிகாரிகள் மட்டுமே சென்று சம்பிரதாயத்திற்காக வரவேற்பு அளித்ததாகவும் கூறப்படுவது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

பாகிஸ்தான் துணை பிரதமர் நேற்று சீனாவுக்கு சென்றபோது, அங்கு விமான நிலையத்தில் அவரை கீழ்நிலை ஊழியர்கள் மட்டுமே வரவேற்றனர். அவருக்கு சரியான மரியாதையுடனான வரவேற்பு வழங்கப்படவில்லை என்றும், சீன அதிபர் உட்பட எந்த முக்கிய தலைவர் அல்லது அதிகாரியும் வரவேற்புக்கு செல்லவில்லை என்றும் கூறப்படுகிறது.

அது மட்டுமின்றி, விமான நிலையத்திலிருந்து ஹோட்டலுக்கு அவரை ஒரு சாதாரண ஏர்போர்ட் பேருந்தில் தான் அழைத்துச் சென்றதாகவும், பொதுவாக பயணிகள் செல்லும் அந்த பேருந்திலேயே அவர் சென்றதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.
சீனாவுக்கு சென்ற பாகிஸ்தான் துணை பிரதமருக்கு எந்தவிதமான மரியாதையும் கிடைக்காத சூழ்நிலையில், தனது தன்மானத்தை இழந்த நிலையில் அவர் இந்த பயணத்தை மேற்கொண்டுள்ளதாக கூறப்படுகிறது.

சீனாவால் பாகிஸ்தானுக்கு வழங்கப்பட்ட ஏவுகணைகள், இந்தியா மீது தாக்குதல் நடத்த பயன்படுத்தப்பட்ட போதிலும், அதனால் எந்தவிதமான முக்கிய வெற்றியும் கிடைக்கவில்லை. இதனால் சீனா, பாகிஸ்தானின் செயல்பாடுகளால் ஏமாற்றமடைந்த நிலையில், அதற்காகவே பாகிஸ்தானுக்கு எதிராக கோபமாக இருப்பதாக கூறப்படுகிறது.

ITS AD

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *