இப்போவாவது அன்வார் உணர்ந்துள்ளாரே! – அக்மால் சலே சாடல்!

- Sangeetha K Loganathan
- 25 May, 2025
மே 25,
தற்போது பிரதமராக இருக்கும் Datuk Seri Anwar Ibrahim கடந்த காலங்களில் எதிர்க்கட்சியாக இருந்த போது அரசாங்கத்தின் பல்வேறு நடவடிக்கைகளை விமர்சித்தவர் இப்போது பிரதமராக இருக்கும் அவரும் அப்படியே செயல்படுவது அதிகார அரசியல் என்றால் என்ன என்பதை அன்வார் இப்போது புரிந்திருப்பதாக அம்னோ இளைஞர் பிரிவு தலைவர் Datuk Dr Muhamad Akmal Saleh சாடினார். அரசாங்கத்தை வழிநடத்தும் தலைவர்கள் அரசியல் ரீதியாக அரசு நிறுவனங்களில் நியமனங்களை வழங்குவதைத் தவறில்லை என அன்வார் தெரிவித்ததை மேற்கோள்காட்டிய அக்மால் சலே இவ்வாறு தெரிவித்தார்.
அரசியல் அதிகாரத்தில் இருப்பவர்கள் ஒரு சில காரியங்களைச் செய்தாக வேண்டும். அப்படியானச் செயல்பாடுகளில் நேர்மையாக இருக்கிறோமா என்பதே கேள்வி. பாரிசான் அரசியல் ரீதியாக அரசு நிறுவனங்களில் நியமனம் வழங்கியதை விமர்சித்த அன்வார் இப்போது அதை ஏற்றுக் கொண்டார். பாரிசானும் கடந்த காலங்களில் இதையே பாரிசானும் செய்தது. நேர்மையாகப் பாரிசான் ஆட்சியில் அரசியல் ரீதியான நியமனங்களை வழங்கியது என Datuk Dr Muhamad Akmal Saleh தெரிவித்தார்.
Akmal Saleh menyindir Anwar Ibrahim kerana menerima pelantikan politik dalam agensi kerajaan yang dahulunya beliau kritik. Akmal menyatakan Anwar kini memahami realiti kuasa politik dan mempertikai sama ada pelantikan itu dilakukan dengan integriti atau tidak.
Leave a Reply
Your email address will not be published. Required fields are marked *