7 பிள்ளைகளுடன் சிரமப்படும் ஸ்டென்லிக்கு பலாக்கோங் சட்டமன்ற உறுப்பினர் உதவி!

top-news
FREE WEBSITE AD

செராஸ், ஏப். 29-

ஏழு பிள்ளைகளோடு பெரும் சிரமத்தை எதிர்நோக்கி வரும் ஸ்டென்லி த/பெ சம்சன் சல்மன் (49) எனும் ஆடவர் குடும்பத்தினரின் சுமையைக் குறைக்க நிதியுதவி வழங்கியுள்ளார் பலாக்கோங் சட்டமன்ற உறுப்பினர் வேய்ன் ஓங் கன் வேய்.

செயற்கை கால் பொருத்தப்பட்டிருக்கும் ஸ்டென்லி, குடும்பத்தின் தேவைகளை நிறைவு
செய்ய குப்பைகளைத் திரட்டி விற்பனை செய்து அதன் மூலம் வருமானத்தை ஈட்டி வருகிறார்.இவரின் மனைவி லெட்சுமி இரு தினங்களுக்கு முன்புதான் தொழிற்சாலையில் வேலை செய்யத் தொடங்கியுள்ளார். இத்தம்பதியருக்கு 5 மாதம் தொடங்கி 17 வயது வரையில் ஏழு பிள்ளைகள் உள்ளனர்.

வாடகை வீட்டில் குடியிருந்து வரும் இக்குடும்பத்தினரால் கடந்த மூன்று மாதங்களாக வீட்டு வாடகை செலுத்த இயலவில்லை.இதனைக் கேள்வியுற்ற பலாக்கோங் சட்டமன்ற உறுப்பினர் வெய்ன் ஓங் கன் வேய் அந்த நிதிக்கு உடனடியாக ஏற்பாடு செய்தார்.

Stanley bersama tujuh anak yang menghadapi kesusahan hidup, menyara keluarga dengan mengutip sampah. Isterinya baru mula bekerja di kilang. Tidak mampu bayar sewa rumah selama tiga bulan, mereka menerima bantuan kewangan segera daripada ADUN Balakong, Wayne Ong Ken Wei.


ITS AD

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *