ஜலான் மஸ்ஜிட் இந்தியாவில் மீண்டும் இன்னொரு குழி! பொதுமக்கள் பீதி!

top-news
FREE WEBSITE AD

கோலாலம்பூர், ஆகஸ்ட் 28: கோலாலம்பூர், ஜலான் மஸ்ஜிட் இந்தியாவில் நில அமிழ்வு நிகழ்ந்து அதில் பாதிக்கப்பட்ட மாதுவைத் தேடி வரும் நிலையில், சம்பந்தப்பட்ட பெண் விழுந்த இடத்திலிருந்து சுமார் 50 மீ தொலைவில் மற்றொரு குழி உருவாகியுள்ளது, பொதுமக்கள் மத்தியில் பீதியை ஏற்படுத்தியுள்ளது.

இன்று அதிகாலை 2.30 மணியளவில் நில அமிழ்வு ஏற்பட்டு இது  நிகழ்ந்ததாகக் கூறப்படுகிறது, முந்தைய இரவு பெய்த கனமழை மற்றும் புயலால் ஏற்பட்டதாக நம்பப்படுகிறது.

அந்த இடத்தில் நடந்த சோதனையில், அசம்பாவிதங்கள் ஏதும் நிகழாமல் தடுக்க கோலாலம்பூர் நகராண்மைக் கழகம் மூலம் மூழ்கும் பகுதி சுற்றி வளைக்கப்பட்டுள்ளதாகத் தெரிகிறது,

இந்நிலையில் தேசிய போலீஸ் படைத்தலைவர் டான்ஸ்ரீ ரஸாருடின் உடனடியாக இரண்டாவது குழி விழுந்த இடத்திற்கு வந்து பார்வையிட்டார்.

இன்று புதன்கிழமை காலை 8 மணிக்கு நடந்த சோதனையில், காவல்துறை, தீயணைப்பு மற்றும் மீட்புத் துறை, DBKL மற்றும் குடிமைத் தற்காப்புப் படை பணியாளர்கள் அடங்கிய குழு 6 வது நாளாக மீட்பு நடவடிக்கையை மேற்கொண்டு வருவது குறிப்பிடத்தக்கது!

ITS AD

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *