சம்பள உயர்வும் – அரசு ஊழியர்களின் கவலையும்...

top-news
FREE WEBSITE AD

புத்ராஜெயா, ஆகஸ்ட் 22: அரசு ஊழியர்களுக்கான பிரதமர் டத்தோஸ்ரீ அன்வார் இப்ராகிமின் சமீபத்திய அறிவிப்பைத் தொடர்ந்து, டிசம்பரில் புதிய சம்பள மாற்றத்தின் முதல் கட்டத்திற்கான அரசு ஊழியர்கள் எதிர்பார்ப்புக்கு மத்தியில், அவர்களிடையே சில ‘கவலைகள்’ உள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

சம்பள அதிகரிப்பு அல்லது போனஸ் கொடுப்பனவுகள் பற்றிய அறிவிப்புகளைத் தொடர்ந்து, வர்த்தகர்களும் முந்தைய விலை உயர்வுகளுடன் இதை இணைத்து, டிசம்பரில் விலை உயர்த்தும் சாத்தியம் ஏற்படலாம் என்று அரசு ஊழியர்கள் கவலை தெரிவித்துள்ளனர்.

எனவே, அரசு ஊழியர்களின் நல்வாழ்வை மேம்படுத்தும் பிரதமரின் இலக்கை நனவாக்கும் வகையில், தொடர்ச்சியான விலைவாசி உயர்வு பிரச்சினைக்குத் தீர்வு காண, சம்பந்தப்பட்ட அமைச்சகங்களிலிருந்து கடுமையான அமலாக்கம் தேவை எனப் பலரும் வலியுறுத்துகின்றனர்.

உள்நாட்டு வர்த்தகம் மற்றும் வாழ்க்கைச் செலவு அமைச்சு அதிகாரிகளால் பொருள்கள் மற்றும் சேவைகளின் விலைகள் திறம்பட கட்டுப்படுத்தப்படாவிட்டால் சம்பள உயர்வு என்பது ஒன்றுமில்லை என்று அவர்கள் தெரிவித்துள்ளனர்.

வர்த்தகர்கள் விலைகளை உயர்த்தாமல் இருப்பதை உறுதிப்படுத்த, குறிப்பாக KPDN-ல் இருந்து அமலாக்க அதிகாரிகள் களத்தில் கண்காணிப்பை தீவிரப்படுத்த முடியும் என்று தாம் நம்புவதாக  52 வயதான சோப்ரி முகமட் அகிர் பெர்னாமாவிடம் தெரிவித்துள்ளார்.

உள்ளூர் பல்கலைக்கழகத்தில் பணிபுரியும் சோப்ரி, அரசு ஊழியர்களின் சம்பளத்தை அதிகரிப்பதற்கான முடிவு நேர்மறையான முடிவு என்று கூறினார். இது தற்போதைய காலத்தின் வளர்ந்து வரும் தேவைகளை சமநிலைப்படுத்துவதில் அரசு ஊழியர்களின் நலனில் அரசாங்கத்தின் அக்கறையை நிரூபிக்கிறது.

இதே உணர்வைப் பகிர்ந்து கொண்ட 34 நான்கு வயது எஸ்.ருத்ரா, “வாழ்க்கைச் செலவு அதிகரித்து வருவதைக் கருத்தில் கொண்டு இந்தச் சம்பள உயர்வு சரியானதுதான். எனது சம்பளம் RM3,500 ஆகும். இது கிராமப்புறங்களில் வசிக்கும் போது ஆடம்பரமாகக் கருதப்படலாம். ஆனால் RM5,500 ஐ எட்டாத குடும்ப வருமானத்துடன், நகரத்தில் வாழ்வது மிகவும் சவாலானதாக இருக்கும். இது இரண்டு குழந்தைகளுக்கான தேவைகள், கல்வி மற்றும் குழந்தை பராமரிப்பு போன்ற பகுதிகளில் செலவுகள் அதிகரித்து வருகின்றன என்று அவர் கூறினார்.

 40 வயதான அப்துல் ஹலீம் அப்துல் ரஹ்மானுக்கு, ஒன்று முதல் 15 வயது வரை உள்ள ஐந்து குழந்தைகளை வளர்ப்பதில் அவரது நிதிச் சுமையை குறைக்க இந்த சம்பள மாற்றம் உதவும் என்கிறார்,

செயல்பாட்டு உதவியாளராக, எனது சம்பளம் சுமார் RM2,000 மட்டுமே. சம்பள உயர்வு மூலம், நகர்ப்புற ஏழைகள் என வகைப்படுத்தக்கூடிய என்னைப் போன்ற ஒருவருக்கு அது சுமையை குறைக்க உதவும். இருப்பினும், சில வர்த்தகர்கள் இதை ஒரு சாக்காகப் பயன்படுத்தி விலையை உயர்த்தக்கூடும் என்று நான் கவலைப்படுகிறேன்.

என் கருத்துப்படி, பொதுமக்களும் KPDN அமலாக்க அதிகாரிகளும் இணைந்து செயல்பட வேண்டும். விலைவாசி உயர்வைப் பொதுமக்கள் தெரிவிக்க எளிதான அமைப்பு இருக்க வேண்டும், எனவே அவர்கள் சமூக ஊடகங்களை நாட வேண்டாம், ஆனால், அமலாக்க நடவடிக்கைகள் பயனுள்ளதாகவும் விரைவாகவும் இருக்க வேண்டும்என்று அவர் கூறினார்!

 

ITS AD

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *