மலாய் அரசியல் மாறிவிட்டது; இது நச்சு அரசியல்!

top-news
FREE WEBSITE AD

கோலாலம்பூர், ஆகஸ்ட் 22: மலாய் அரசியல் நிலப்பரப்பில் சிறந்த கருத்துக்களை அடிப்படையாகக் கொண்ட முதிர்ந்த, கண்ணியமான மற்றும் சிந்தனைமிக்க அரசியல் இறந்துவிட்டது என்று அம்னோ துணைத் தலைவர் முகமட் ஹசான் தெரிவித்துள்ளார்.

மலாய் அரசியல் பல ஆண்டுகளாக கணிசமாக மாறிவிட்டதாகவும், இப்போது அவதூறு, வெறுப்பு மற்றும் அவமதிப்புகளால் குறிக்கப்பட்ட நச்சு அரசியல் ஆதிக்கம் செலுத்துவதாகவும் முகமட் கூறினார்.

அரசியலில் ஈடுபடுவதற்கும், அரசியல் இயக்கங்களின் இலட்சியங்களை ஆதரிப்பதற்கும் நம்மைத் தூண்டும் அடிப்படை கொள்கைகளை அது அழித்துவிட்டது என்று அம்னோவின் மகளிர், இளைஞர் மற்றும் புத்ரி பிரிவுகளின் பொதுக்குழுவை நேற்ற்று இரவு தொடங்கி வைத்து பேசிய போது அவர் இவ்வாறு கூறினார்.

தோக் மாட் என்று அன்புடன் அழைக்கப்படும் முகமட், நச்சு அரசியல் யாருக்கும் பயனளிக்காது என்பதை மலாய்க்காரர்கள் அறிந்து கொள்ள வேண்டும் என்று கேட்டுக்கொண்டார்.

இது மலாய் அரசியலின் கலாச்சாரம் மற்றும் நடத்தைக்கு கடுமையான சேதத்தை ஏற்படுத்தும், என்று அவர் சுட்டிக்காட்டினார்

உண்மையில், இது மலாய் அரசியலின் தரங்களையும் நெறிமுறைகளையும் மிகக் குறைந்த நிலைக்குச் சீரழித்துள்ளது என்றார்.

எனவே, வளர்ந்து வரும் பிரச்சினைக்கு எதிராக பகுத்தறிவு மற்றும் ஆக்கப்பூர்வமான தீர்வுகளுடன் போராட வேண்டும் என்று முகமட் கட்சிக்கு அழைப்பு விடுத்தார்.

அம்னோவின் எதிர்காலம் நச்சு அரசியலை எதிர்த்துப் போராடுவதில் கட்சியின் செயல்திறனைப் பொறுத்தது, என்றார்!

ITS AD

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *