தேசிய நாணயங்களைப் பயன்படுத்தி மலேசியா-இந்தியா வர்த்தக பரிமாற்றம்!

top-news
FREE WEBSITE AD

புதுடெல்லி, ஆகஸ்ட் 21: தேசிய நாணயங்களைப் பயன்படுத்தி மலேசியா-இந்தியா வர்த்தக பரிமாற்றம் என்ற யோசனையை ஆதரிப்பதாக பிரதமர் டத்தோஸ்ரீ அன்வார் இப்ராகிம் நேற்று தெரிவித்தார்.

இந்தியாவுடனான இருதரப்பு வர்த்தகத்தை வளர்க்க, ரூபாய் மற்றும் ரிங்கிட்டின் பயன்பாட்டை விரிவுபடுத்த பேங்க் நெகாரா மலேசியா ஒப்புக்கொண்டுள்ளதாக பிரதமர் கூறினார்.

இது சீனா, தாய்லாந்து மற்றும் இந்தோனேசியாவுடனான மலேசியாவின் வர்த்தகத்தில் ரிங்கிட் மூலம் வெற்றிகரமாக செய்யப்பட்டதைப் போன்றது என்று அவர் சுட்டிக்காட்டினார்.

உள்ளூர் கரன்சிகளைப் பயன்படுத்த வேண்டும் என்ற இந்திய பிரதமர் (நரேந்திர) மோடியின் முன்மொழிவுக்கு தாம் மிகவும் சாதகமாக பதிலளித்ததாக அன்வார் ஒரு கேள்வி பதில் அமர்வின் போது தெரிவித்தார்.

அமெரிக்காவால் இயக்கப்படும் "காலாவதியான" பணவியல் முறையைச் சார்ந்து இருப்பதை விட அதிகமான நாடுகள் வர்த்தகத்தில் தேசிய நாணயங்களைப் பயன்படுத்த வேண்டும் என்று அன்வார் பரிந்துரைத்தார்.

 முன்னதாக, அன்வாருடன் ஒரு கூட்டு செய்தியாளர் கூட்டத்தில் மோடி தனது கருத்துக்களில், இந்தியா-மலேசியா வர்த்தகம் நிலையான முன்னேற்றம் அடைந்து வருவதாகவும், பரிவர்த்தனைகளை இப்போது ரூபாய் மற்றும் ரிங்கிட்களில் தீர்க்க முடியும் என்றும் குறிப்பிட்டார்.

இருதரப்பு வர்த்தகம் மற்றும் முதலீடுகளில் உள்ளூர் நாணய தீர்வைப் பயன்படுத்துவதை ஊக்குவிப்பதற்காக இந்திய ரிசர்வ் வங்கி மற்றும் ப் இடையேஏங் நெகாரா இடையேயான ஒத்துழைப்பை இரு பிரதமர்களும் பாராட்டியதாக இந்தியா-மலேசியா கூட்டு அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

67 ஆண்டுகால இந்தியா-மலேசியா உறவுகளை வலுப்படுத்தவும், எதிர்காலத்திற்கான பல துறை ஒத்துழைப்பு நிகழ்ச்சி நிரலை நிறுவவும் மூன்று நாள் உத்தியோகபூர்வ பயணமாக அன்வார் திங்களன்று இந்திய தலைநகர் புது தில்லிக்கு பயணமானார்.

இந்த விஜயத்தில் அன்வாருடன் வெளியுறவு அமைச்சர் டத்தோஸ்ரீ முகமட் ஹாசன்; முதலீடு, வர்த்தகம் மற்றும் தொழில்துறை அமைச்சர் தெங்கு டத்தோஸ்ரீ ஜஃப்ருல் தெங்கு அப்துல் அஜீஸ்; சுற்றுலா, கலை மற்றும் கலாச்சார அமைச்சர் தியோங் கிங் சிங்; இலக்கவியல் அமைச்சர் கோபிந்த் சிங் தியோ; மற்றும் மனிதவள அமைச்சர் ஸ்டீவன் சிம் சீ கியோங் ஆகியோர் உடன் சென்றனர்.

2022 நவம்பரில் பிரதமராக பதவியேற்ற பிறகு, பிரதமரின் இந்தியா பயணம் இதுவே முதல் முறை.

மலேசியாவிற்கும் இந்தியாவிற்கும் இடையிலான மொத்த வர்த்தகம் 16.5 பில்லியன் அமெரிக்க டாலர்களாக உள்ளது!

ITS AD

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *