மலேசிய - ரஷ்ய கூட்டமைப்பு உறவு மேலும் வலுப்படுத்தப்பட்டது!

top-news
FREE WEBSITE AD

கசான், மே 18-

வெள்ளிக்கிழமை நிறைவடைந்த பிரதமர் டத்தோஸ்ரீ அன்வார் இப்ராஹிமின் அதிகாரப்பூர்வப் பயணத்தின் வழி, மலேசியாவிற்கும் ரஷ்ய கூட்டமைப்புக்கும் இடையில் உள்ள வலுவான இருதரப்பு உறவு மேலும் வலுப்படுத்தப்பட்டது.

இரு நாடுகளுக்கும் இடையிலான நெருங்கிய உறவு, இரு தரப்பினரும் வழங்கும் புதிய களத்தை ஆராய்வது உட்பட, மிகவும் சாதகமான வர்த்தக ஒத்துழைப்பாக மாற்றப்படும் என்று தமது பயணத்தின் இறுதி நாளில் நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பில் பிரதமர் கூறினார்.

ஏரோஃப்ளோட் விமான நிறுவனத்தின் வழியாக மலேசியா, குறிப்பாக சுற்றுலாத் துறையில் பெரும் நன்மைகளைப் பெறும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. அந்நிறுவனம் கூடிய விரைவில், நமது நாட்டிற்கு விமானப் பயணங்களை மீண்டும் தொடங்கும் என்று எதிர்பார்க்கப்படுவதாக  அன்வார் இப்ராஹிம் தெரிவித்தார்.

"ஹலால் கட்டமைப்பும் இஸ்லாமிய வங்கி, நிதிக்கு அதிபர் புதினின் வெளிப்படையான ஆதரவு உள்ளது" என்றார் அவர்.கடந்த செவ்வாய்க்கிழமை முதல், தமது அதிகாரப்பூர்வ பயணம் குறித்து செய்தி சேகரித்து வந்த மலேசிய ஊடகங்களிடம் அவர் அவ்வாறு கூறினார்.

தமது பயணத்தின்போது, மலேசியாவில் தங்கள் வணிகத்தை விரிவுபடுத்த ஆர்வமுள்ள ரஷ்யாவில் உள்ள 24 நிறுவனங்களுடன் தானும் பேராளர் குழுவினரும் சந்திப்புகளை நடத்தியதாக அன்வார் குறிப்பிட்டார்.அதோடு, ரஷ்யாவில் வர்த்தக அம்சங்களைப் பற்றி மேலும் அறிய விரும்பும் நிறுவனங்களுடன் இரண்டு வணிக தொடர்பான நிகழ்ச்சிகளையும் ஏற்று நடத்தினார்.


Lawatan rasmi Perdana Menteri Anwar Ibrahim ke Rusia mengukuhkan hubungan dua hala Malaysia-Rusia. Ia membuka peluang kerjasama dalam sektor pelancongan, halal, perbankan Islam dan perdagangan. Anwar turut bertemu 24 syarikat Rusia yang berminat melabur di Malaysia.

ITS AD

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *