ப்ளூம்பெர்க் சர்வதேச ஊடகத்திற்கு மலேசிய காவல்துறை சம்மன்!
- Shan Siva
- 09 Oct, 2024
கோலாலம்பூர், அக் 9: மலேசிய லஞ்ச ஊழல் தடுப்பு ஆணையமான எம்ஏசிசியின் விசாரணையில்
குறுக்கீடு செய்ததாகக் கூறப்படும் குற்றச்சாட்டை விசாரிக்க சர்வதேச ஊடகமான
ப்ளூம்பெர்க்கிற்கு காவல்துறை சம்மன் அனுப்பவுள்ளது.
அம்னோவின் உச்சமன்ற செயற்குழுவின்
முன்னாள் உறுப்பினர் இஷாம் ஜலீல் சமூக ஊடகங்களில் வெளியிட்ட அறிக்கையைத் தொடர்ந்து, எம்ஏசிசி அறிக்கை தாக்கல் செய்ததாக கோலாலம்பூர் காவல்துறைத்
தலைவர் டத்தோ ருஸ்டி முகமட் இசா தெரிவித்தார்.
சில நபர்கள் குறிப்பாக
ப்ளூம்பெர்க்கிலிருந்தும் அழைக்கப்படுவார்கள் என்று அவர் செய்தியாளர்களிடம்
கூறினார்.
MACC விசாரணையில் குறுக்கீடு
செய்ததாகக் கூறப்படும் ப்ளூம்பெர்க் மீது வழக்குத் தொடர அன்வாரை வலியுறுத்தும் ஓர்
அறிக்கையை இஷாம் முன்பு வெளியிட்டிருந்தார்.
மில்லியன்கணக்கான ரிங்கிட்
மதிப்புள்ள பங்குகளை வாங்கிய விவகாரம் தொடர்பாக அவரது முன்னாள் அரசியல் செயலாளர்
ஃபர்ஹாஷ் வஃபா சால்வடார் ரிசால் முபாரக்கை விசாரிக்க வேண்டாம் என்று அன்வார்
எம்ஏசிசியிடம் கேட்டுக்கொண்டதாக அறிக்கை வெளியிட்டதற்காக புளூம்பெர்க்கிற்கு
எதிராக சட்ட நடவடிக்கை எடுக்க இஷாம் பரிந்துரைத்தார்.
ப்ளூம்பெர்க்கின் கூற்று உண்மை
இல்லை என்றால், அது கடுமையான அவதூறு
என்றும் இஷாம் தெரிவித்தார்!
Leave a Reply
Your email address will not be published. Required fields are marked *