2025 ஆம் ஆண்டில் ஆசியான் தலைவர் பதவியை மலேசியா ஏற்க உள்ளது-அன்வார்!

top-news
FREE WEBSITE AD

கோலாலம்பூர், அக் 14:

ஒவ்வொரு குரலும் முக்கியமானது’ மற்றும் ‘யாரையும் விட்டுவிடாது’என்பதை உறுதிசெய்து, உள்ளடக்கம் மற்றும் நிலைத்தன்மையை மையமாகக் கொண்ட தெளிவான பார்வையுடன் எதிர்காலத்தைத் தழுவி, 2025 ஆம் ஆண்டில் ஆசியான் தலைவர் பதவியை மலேசியா ஏற்க உள்ளது என்று மலேசியப் பிரதமர் டத்தோஸ்ரீ அன்வார் இப்ராஹிம் தெரிவித்துள்ளார்.

Asean Community Vision 2045 இன் வழிகாட்டுதலின் கீழ், ஒரு புதிய அத்தியாயம் தொடங்கும். இது 20 ஆண்டுகால பயணத்தின் தொடக்கத்தைக் குறிப்பதோடு, பகிரப்பட்ட விதியை வடிவமைக்க அனைவரும் ஒன்றாகத் தொடரும் பயணம் என அவர் வர்ணித்தார்.
‘மலேசியாவிற்கு வரவேற்கிறோம்’ என்ற வாசகங்களுடன் அவர் தனது முகநூல் பதிவில் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.


ITS AD

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *