காளியம்மாவை நான் பிசிரு என்பேன் உசுரு என்பேன். அது எங்கள் கட்சி! - சீமான்!

top-news
FREE WEBSITE AD

இந்தியாவின் தமிழ்நாட்டில் சட்ட ஒழுங்கு சீர்கேடு மற்றும் மின் கட்டண உயர்வை கண்டித்து நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் தலைமையில் மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம் சென்னை வள்ளுவர் கோட்டத்தில் நடைபெற்றது.

தில் கலந்துகொண்டு பேசிய சீமான், "விமானத்தில் இருந்தபடி கேரளாவை பார்த்தால் ஆங்காங்கே கட்டிடங்கள்,பெரும்பாலும் மரங்கள் தான் தெரியும் ஆனால் தமிழ்நாட்டில் ஆங்காங்கே பச்சை மரங்கள்,பெரும்பாலும் கட்டிடங்கள் தான் தெரியும். காடுகளை அழித்தவர்களே காடுகளை அழிப்பது தவறு என்று பேசுகிறார்கள்.

மெரினா கடற்கரையில் நம்ம சென்னை என்ற வாசகம் "நம்ம" என்பது தமிழில் உள்ளது. ஆனால் "சென்னை" என்பது வேறு மொழியில் உள்ளது. முருகன் மாநாட்டில் குறைந்தது 20 நிமிடம் முருகனை பற்றி முதலமைச்சர் முக ஸ்டாலின் பேச வேண்டும். நான் முருகனை பற்றி பேசியபோது திமுகவினர் என்னை திட்டினார்கள். தற்போது திடீரென்று முருகனை இவர்கள் தூக்குவது ஏன்?"

"திராவிட மாடல் ஆட்சியில் திராவிட புதல்வன் என்று ஏன் பெயர் வைக்கவில்லை? தமிழ்ப் புதல்வன் என்று எதற்கு பெயர் வைக்கிரீர்கள்? நாங்கள் தமிழ் தேசியம் பேசினால் இன பாகுபாடு, பிரிவினைவாதம் என சொல்கிறார்கள். என்னுடன் எதற்கு கூட்டணி பேசினீர்கள்.

திமுக ஆட்சியை ராமர் ஆட்சி என்று அமைச்சர் ரகுபதி பேசியதற்கு பாஜகவினர் கோபம் அடைந்திருக்க வேண்டும். இவ்வளவு கேவலமான ஆட்சியா ராமர் ஆட்சி என கோபம் கொண்டிருக்க வேண்டும். தமிழகத்தில் 2024 ஆம் ஆண்டில் மட்டும் இதுவரை 595 கொலைகள் நடந்து இருக்கின்றன".

"சீமான் யாருடன் என்ன பேசுகிறார் என்பதை கண்காணிப்பது தான் காவல்துறையினரின் வேலையா? காளியம்மாவை நான் பிசிரு என்பேன் உசுரு என்பேன். அது எங்கள் கட்சி பிரச்சனை. எங்கள் கட்சிக்குள் நடப்பதை எதற்கு நீங்கள் பேசுகிறீர்கள்...இதையெல்லாம் பேசிக்கொண்டு திரிகிறார்கள். இது மிகவும் கேவலமான விசயம்

அப்பா, அம்மா பேச்சை கேட்டிருந்தால் நான் வாத்தியராக சென்றிருப்பேன், அதை கேட்காததால் தான் இங்கு கத்திக் கொண்டு இருக்கிறேன். 15 ஆண்டுகளாக ஒரு பெண்ணை என்னுடன் இணைத்து வைத்து பேசினார்கள். அதன் பிறகு தான் எனக்கு பெண் ரசிகர்கள் அதிகரித்தார்கள்.

ஆட்சியில் இருப்பவர் கையெழுத்து போட்டுவிட்டார். அதனால் காட்டுபாக்கம் துறைமுகத்தை கட்டிவிடலாம் என அதானி எண்ணிவிட கூடாது. நான் இருக்கும் வரை அது நடக்காது. சண்டாளன் என்பது தமிழ்நாடு பாடநூலில் உள்ளது. இன்று முதல் நாம் தமிழர் கட்சியினர் சண்டாளன் என்று பாடாதீர்கள் என்றும் கொடும் சனியன் என பாடுங்கள்" என்றார்.


ITS AD

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *