பிற கட்சிகளோடு இணைந்து இந்தியர்கள் முன்னேற்றத்திற்கு சேவை செய்ய ம.இ.கா. தயங்காது!
- Muthu Kumar
- 15 Oct, 2024
(ஆர்.ரமணி)
பட்டர்வொர்த், அக். 15-
பினாங்கு இந்து அறப்பணிவாரியம் இந்து மாணவர்களுக்கு மட்டும் கல்வி உதவி நிதி வழங்கும் என்பதை மீண்டும் உறுதிப்படுத்தினார் அறப்பணிவாரியத்தின் தலைவரும் நாடாளுமன்ற உறுப்பினருமான ஆர். எஸ். என்.ராயர். “இந்து அறவாரியம் ஏன் கிறிஸ்துவ, முஸ்லிம் மாணவர்களுக்கு கல்வி நிதி தருவதில்லை?” என்று பலரும் கேள்வி எழுப்புகிறார்கள். பினாங்கு இந்து அறப்பணி வாரிய சட்ட விதிகளின்படி, இந்து மாணவர்களுக்கு மட்டுமே கல்வி நிதி உதவி வழங்க வேண்டும் என்று குறிப்பிடப்பட்டுள்ளது.
எனவே, அந்தச் சட்ட விதிப்படி நாங்கள் செயல்பட்டு வருகிறோம்." என்றார் அவர். பட்டர்வொர்த் இலக்கவியல் நூலகத்தில் நடைபெற்ற நிதி வழங்கும் விழாவில் கலந்து கொண்டு அவர் உரையாற்றினார். “பினாங்கு இந்து அறப்பணி வாரியம் எந்தத் தவறும் செய்யாமல், நீதியாக, நியாயமாக செயல்பட்டு வருகிறது. அதன் செயல்பாடுகளை அறியாத சிலர் சமூக ஊடகங்களில் தவறான செய்திகளைப் பரப்பி வருகிறார்கள். இத்தகைய செய்தியைப் பரப்பும் அவர்கள், இது தவறு என்று தெரிந்தும் செய்கிறார்கள். "இந்து அறப்பணிவாரியம் இந்து மாணவர்களுக்காக, குறிப்பாக பி40 பிரிவைச் சார்ந்த மாணவர்களுக்கு எப்படியெல்லாம் நிதி உதவி சேகரித்துத் தர முடியும் என்று நாங்கள் விவாதிக்கிறோம்.
ஆலய சீரமைப்பிற்கும் கட்டுமானத்திற்கும் வழங்கப்படும் நிதியிலிருந்து பத்து சதவிகித நிதி ஏழை மாணவர்களுக்கு சிறப்பாக வழங்கி வருகிறோம். இதனால், நம் சமூக வளரும் தலைமுறை கல்வி கற்ற சமூகமாக உயரும் என்ற கருத்தை தமதுரையில் வலியுறுத்தினார். “பினாங்கு இந்து அறப்பணிவாரியம் கடந்த ஆறு ஆண்டுகளாக மாணவர்களுக்கு கல்வி நிதி வழங்கி வருகிறது.
நேற்றைய நிதி வழங்கும் நிகழ்ச்சியில் 44 மாணவர்கள் கல்வி நிதி பெற்றார்கள். கல்லூரிகளில் சான்றிதழ் துறை கல்வி கற்பவர்களுக்கு 500 ரிங்கிட், டிப்ளோமா கல்வி கற்பவர்களுக்கு 800 ரிங்கிட், பட்டப்படிப்பு மாணவர்களுக்கு 1,000 ரிங்கிட், சபா, சரவாக்கில் கல்வி பயிலும் மாணவர்களுக்கு கூடுதலாக 500 ரிங்கிட் வழங்குகிறோம். என்றார் வாரியத்தின் துணைத் தலைவர் செனட்டர் டாக்டர் அ. லிங்கேஸ்வரன்.
“கடந்த ஆண்டு, 65 மாணவர்களுக்கு 68,000 ரிங்கிட் கல்வி நிதி வழங்கினோம். இவ்வாண்டு ஆகஸ்ட் மாதம் 120,000 ரிங்கிட் வழங்கினோம். பினாங்கு இந்து அறப்பணி வாரியம் இதுவரை 1,20,000 ரிங்கிட் கல்வி உதவித்தொகை வழங்கியுள்ளது. பி40 பிரிவைச் சேர்ந்த வசதி குறைந்த மாணவர்கள், அறப்பணிவாரியத்திற்கு விண்ணப்பிக்கலாம்.
"நீரிழிவு நோயால் பாதிக்கப்பட்டவர்களின் சிறுநீரக சுத்திகரிப்பிற்கும், தமிழ்ப் பள்ளிகளுக்கும் 1,50,000 ரிங்கிட் உதவித்தொகை வழங்கியுள்ளது.பினாங்கு அறவாரியம் சொந்தமாக சிறுநீரக சுத்திகரிப்பு நிலையம் அமைப்பதற்கான ஏற்பாடுகளை செய்து வருகிறது.என்றார் அவர். "பினாங்கு இந்து அறப்பணிவாரியம் நீதியாக செயல்பட்டு வருகிறது. 'கனி தரும் மரம்தான் கல்லடி படும்' என சொல்லப்படுவது போல,அறப்பணி வாரியம் செய்து வரும் பணிகளை ஏற்காமல் சிலர் பொறாமையால் சமூக ஊடகங்களில் குற்றம் கூறி வருகின்றனர்.
இதையெல்லாம் புறக்கணித்து, நம் மக்களின் முன்னேற்றத்திற்காக எங்களது சேவையைத் தொடர்ந்து செய்து வருகிறோம், என்றார் ம.இ.கா. பினாங்கு மாநிலத் தலைவர் டத்தோ ஜெ.தினகரன். ஏய்ம்ஸ்ட் பல்கலைக்கழகத்தில் மூன்று மாணவர்கள் பயில கல்வி உதவித்தொகை கேட்டார் ராயர். ம.இ.கா. தேசியத் தலைவர் டான்ஸ்ரீ விக்னேஸ்வரன் மூவருக்கல்ல, 23 மாணவர்களுக்கு 1,50,000 ரிங்கிட் உதவித்தொகை 66 வழங்கினார். “ராயர் கேட்டார், விக்னேஸ்வரன் தந்தார். பிற கட்சிகளோடு இணைந்து, இந்தியர்கள் முன்னேற்றத்திற்கு சேவை செய்ய ம.இ.கா. என்றும் தயங்காது, என அவர் கூறினார். இதையடுத்து, வசதி குறைந்த மாணவர்களுக்கு உதவித்தொகை வழங்கப்பட்டது என்றார் அவர்.
Leave a Reply
Your email address will not be published. Required fields are marked *