ஹமாஸ் அரசியல் தலைவர் படுகொலை! - ஹாடி அவாங் கண்டனம்!

- Shan Siva
- 31 Jul, 2024
கோலாலம்பூர், ஜூலை 31: ஹமாஸ் அரசியல் அமைப்பின் தலைவர் இஸ்மாயில்
ஹனியே தெஹ்ரானில் மரணமடைந்ததைத் தொடர்ந்து படுகொலை செய்யப்பட்டதற்கு பாஸ் தலைவர்
டான்ஸ்ரீ அப்துல் ஹாடி அவாங் கடும் கண்டனம் தெரிவித்துள்ளார்.
ஹனியேவின்
மரணத்திற்கு வழிவகுத்த இஸ்ரேலிய தாக்குதலைக் கண்டித்த அவர், இஸ்லாத்தைப் பாதுகாப்பவர்களைப் புகழ்ந்து பேசும் குர்ஆனின் (அல்-அஹ்சாப்)
வசனத்தை மேற்கோள் காட்டினார்.
இழப்பு குறித்து
ஆழ்ந்த வருத்தத்தை தெரிவித்த அவர்,
"ஹமாஸ் தலைவர் இஸ்மாயில்
ஹனியே மற்றும் அவரது மெய்ப்பாதுகாவலர் ஒருவரின் மரணத்திற்கு காரணமான இஸ்ரேலின்
தாக்குதலை பாஸ் கண்டிக்கிறது என்றும், அவரது
குடும்பத்தினருக்கு இரங்கலைத் தெரிவித்துக்கொள்வதாகவும் அவர் தெரிவித்தார்.
Leave a Reply
Your email address will not be published. Required fields are marked *