குழியில் விழுந்து10 மீட்டர் ஆழத்தில் சிக்கிய தமிழகப் பெண்... காலையில் இருந்து தொடரும் மீட்புப் பணி!

top-news
FREE WEBSITE AD

(iஇரா.கோபி)

கோலாலம்பூர், ஆகஸ்ட் 23: தமிழ்நாட்டிலிருந்து மலேசியாவுக்குச் சுற்றுப்பயணம் வந்திருந்த 46 வயதான விஜயலெட்சுமி என்ற  பெண் பயணி, இன்று  தலைநகர் ஜாலான் மஸ்ஜித் பகுதியில் உள்ள ஒரு குழியில் விழுந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

காலை 9 மணி அளவில் சிறிய குழி போல் இருந்ததில் தவறுதலாக காலை வைத்ததும் பின்னர் குழி பெரிதாக அவர் சுமார் 10 மீட்டர் ஆழத்தில் சிக்கினார். அதிஷ்டவசமாக அவருடன் வந்த மற்றவர்கள் இதில் தப்பினர். இதனை அடுத்து பாதிக்கப்பட்டவரை மீட்கும் பணி தொடர்ந்து நடைபெற்று வருகிறது.

பல்வேறு நிறுவனங்களைச் சேர்ந்த 90 பணியாளர்கள் இந்த நடவடிக்கையில் இணைந்துள்ளதாக டாங் வாங்கி காவல் துறை தலைவர், உதவி ஆணையர் சுலிஸ்மி அஃபெண்டி சுலைமான் தெரிவித்தார்.

சம்பவத்தின் நேரில் கண்ட சாட்சிகளின் அடிப்படையில், அந்தப் பெண்ணைத் தேடும் பணி உடனடியாக செயல்படுத்தப்பட்டதாக அவர் கூறினார்.
இதுவரைக்கும், காவல்துறை, தீயணைப்பு மற்றும் மீட்புத் துறை, கோலாலம்பூர் நகர மண்டபம், குடிமைத் தற்காப்புப் படை மற்றும் கோலாலம்பூர் மருத்துவமனை ஆகியவை தேடுதல் மற்றும் மீட்புப் பணிகளில் ஈடுபட்டுள்ளதாக அவர் இன்று சம்பவ இடத்தில் செய்தியாளர்களிடம் கூறினார்.

தாங்கள் தமிழ்நாட்டின் குப்பம் பகுதியைச் சேர்ந்தவர் என்றும், காலையில் இருந்தே வேதனையில் காத்திருப்பதாகவும் கண்கலங்க நம்மிடையே தெரிவித்தார் குழியில் சிக்கியுள்ள விஜயலெட்சுமியின் கணவர் மாதவன்!

ITS AD

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *