கனடா பிரதமர் பதவிக்கு போட்டியிட இருந்த தமிழரான அனிதா இந்திரா விலகல்!

- Muthu Kumar
- 13 Jan, 2025
கனடா நாட்டின் பிரதமர் பதவிக்கு போட்டியிடவுள்ளதாக அறிவித்த தமிழரான அனிதா இந்திரா,தான் பிரதமர் போட்டியில் இருந்து விலகுவதாக அறிவித்துள்ளார்.இது குறித்த தகவலை அவர் தனது சமூக ஊடக பக்கத்திலேயே அறிவித்துள்ளார்.
கனடா பிரதமர் பதவியிலிருந்து ஜஸ்டின் ட்ரூடோ விலகுவதாக அறிவித்த நிலையில், அடுத்த பிரதமருக்கான போட்டியில் அமைச்சர் அனிதா இந்திரா உள்பட 9 பேர் களமிறங்கியுள்ளனர்.
இந்நிலையில், தமிழகத்தை பூர்வீகமாக கொண்ட அனிதா இந்திரா, கனடா பிரதமர் பதவிக்கு போட்டியிடவுள்ளதாக அறிவித்திருந்த நிலையில் தற்போது விலகுவதாக அறிவித்துள்ளார். இது தொடர்பில் அவர் ,"பிரதமர் பதவிப் போட்டியிலிருந்து விலகியுள்ளேன். மேலும் நான் நாடாளுமன்றத்திற்கும் மீண்டும் போட்டியிடப்போவதில்லை.
எனக்கு முக்கிய அமைச்சரவை இலாகாக்களை வழங்கிய ஜஸ்டின் ட்ரூடோவுக்கு நன்றி. என்னை நாடாளுமன்ற உறுப்பினராகிய ஓக்வில்லி தொகுதி மக்களுக்கு உண்மையாகவே நன்றியுடன் இருக்கிறேன்.கல்வித்துறைக்குத் திரும்புவதன் மூலம் எனது வாழ்க்கையின் அடுத்த அத்தியாயத்தைத் தொடங்க உள்ளேன்." என அவர் தெரிவித்துள்ளார்.
கனடாவில் பிரதமராக இருந்த ஜஸ்டின் ட்ரூடோ கடந்த 6ஆம் தேதி தனது பதவிவிலகல் முடிவை அறிவித்தார்.அத்துடன், கனடாவின் புதிய பிரதமர் யார் என்பதை ஆளும் லிபரல் கட்சி மார்ச் 9 ஆம் தேதி அறிவிக்கும் என கட்சியின் தலைவர் சச்சித் மெஹ்ரா வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்துள்ளார்.
இவ்வாரான சூழ்நிலையில் அனிதா இந்திராவின் மேற்படி அறிவிப்பு தேர்தல் களத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளமை குறிப்பிடத்தக்கது.
Leave a Reply
Your email address will not be published. Required fields are marked *