முன் எச்சரிக்கையால் பெரும் ஆபத்திலிருந்து தப்பியது கனடா விமானம்!
- Muthu Kumar
- 09 Jun, 2024
கனடாவின் டொராண்டோ பியர்சன் சர்வதேச விமான நிலையத்திலிருந்து, கடந்த வெள்ளிக்கிழமை நள்ளிரவு 12:17 மணிக்கு, ஏர் கனடாவின் போயிங் 777 விமானம், 389 பயணிகள் மற்றும் 13 பணியாளர்களுடன் பாரீஸ் நோக்கிப் புறப்பட்டது.
புறப்பட்ட சில நிமிடங்களில் விமானம் ஓடுபாதையில் மேலேறிக் கொண்டிருந்தபோது, விமானப் போக்குவரத்துக் கட்டுப்பாட்டு அமைப்பு (ATC) விமானத்தின் வலது இன்ஜினிலிருந்து தீப்பொறிகள் வெளியாவதை கண்டறிந்து உடனடியாக விமானிகளை எச்சரித்தது. உடனே விமானம் டொராண்டோ பியர்சன் சர்வதேச விமான நிலையத்தில் பயணிகளுக்கு காயங்களோ அல்லது உயிரிழப்புகளோ ஏற்படாமல், பாதுகாப்பாக தரையிறக்கப்பட்டது.
ஆரம்பத்திலேயே இது கவனிக்கப்பட்டதால், பெரும் விபத்து தவிர்க்கப்பட்டிருக்கிறது. இது தொடர்பாக ஏர் கனடா எக்ஸ் பக்கத்தில் ஓர் அறிக்கையை வெளியிட்டிருக்கிறது. அதில், விமானத்தின் கம்ப்ரசர் தீப்பிடித்ததால் இந்த விபத்து நடந்திருக்கிறது. விமானம் அசம்பாவிதம் நடப்பதற்கு முன்பே தரையிறக்கப்பட்டது. உடனே தீயணைப்புத்துறையினர் தீயைக் கட்டுக்குள் கொண்டுவந்தனர். மேலும், பயணிகள் மற்றொரு விமானத்தில் குறிப்பிட்ட பயணம் மேற்கொள்ள ஏற்பாடு செய்யப்பட்டது எனத் தெரிவித்திருக்கிறது.
Leave a Reply
Your email address will not be published. Required fields are marked *