குரங்கு மீது சாயம் தெளித்த ஆடவன் கைது!

- Muthu Kumar
- 26 May, 2025
ஷா ஆலம், மே 26-
ஷா ஆலமில் கூண்டில் அடைத்து வைக்கப்பட்டிருந்த ஒரு குரங்கின் மீது சாயத்தைத் தெளித்த ஆடவன் ஒருவன், மிருக வதை புரிந்த சந்தேகத்தின் பேரில் கைது செய்யப்பட்டான்.
வனவிலங்கு மற்றும் தேசிய பூங்கா இலாகாவினால் கைது செய்யப்பட்ட அவ்வாடவன், பின்னர் ஒரு போலீஸ் நிலையத்திற்கு கொண்டு செல்லப்பட்டதாக, சுங்கை பூலோ மாவட்ட போலீஸ் தலைவர் ஹஃபிஸ் நோர் தெரிவித்தார்.
2010ஆம் ஆண்டு வனவிலங்கு பாதுகாப்புச் சட்டத்தின் கீழ் அவ்வாடவன் கைது செய்யப்பட்டதாகக் கூறிய அவர், அவ்வாடவன்
குறித்த மேல் விவரங்களை வெளியிடவில்லை.
இத்தகைய குற்றங்களைப் புரிவோர் மிருக வதை குற்றச் செயல் சட்டத்தின் செக்ஷன் 86இன் கீழ் குற்றஞ்சாட்டப்படுவார்கள்.குற்றம் நிரூபிக்கப்பட்டால், 5,000 முதல் 50,000 வெள்ளி வரைக்குமான அபராதம் அல்லது ஓராண்டு வரைக்குமான சிறை அல்லது இரண்டுமே விதிக்க இந்த செக்ஷன் வழிவகுக்கிறது.விலங்குகளை சித்ரவதை செய்வது ஒரு குற்றச் செயல் என்பதால் அவ்வாறு செய்ய வேண்டாம் என்று பொதுமக்களுக்கு தாங்கள் அறிவுறுத்துவதாக, ஹஃபிஸ் கூறினார்.குரங்கு மீது சாயம் தெளிக்கப்பட்ட சம்பவம் தொடர்பிலான ஒரு நிமிட காணொளி சில தினங்களுக்கு முன்னர் சமூக வலைத்தளங்களில் பரவலாக பகிரப்பட்டு வந்தது.
கூண்டில் அடைக்கப்பட்டிருந்த ஒரு குரங்கின் மீது ஓர் ஆடவன் நீல நிற சாயத்தை தெளிக்கும் காட்சி அதில் இடம் பெற்றிருக்கிறது.சிலாங்கூர், ஷா ஆலமில் உள்ள தாமான் டேசா மொக்சிஸ் யு17இல் அச்சம்பவம் நடந்ததாக நம்பப்படுகிறது.
Seorang lelaki ditahan kerana menyembur cat biru ke atas seekor monyet dalam kurungan di Shah Alam. Tindakan ini melanggar Akta Pemuliharaan Hidupan Liar 2010 dan boleh dihukum denda atau penjara.
Leave a Reply
Your email address will not be published. Required fields are marked *