ட்ரம்ப் கட்சி துணை அதிபர் வேட்பாளராக அறிவிக்கப்பட்ட ஜே டி வான்ஸ் மனைவி இந்தியரான உஷா!
- Muthu Kumar
- 16 Jul, 2024
2024 அமெரிக்க அதிபர் தேர்தலில் டிரம்ப் கட்சியி தங்களுடைய துணை அதிபர் வேட்பாளராக ஓஹியோவைச் சேர்ந்த அமெரிக்க செனட்டர் ஜேம்ஸ் டேவிட் வான்ஸ் அறிவிக்கப்பட்டுள்ளார்.
துணை அதிபர் வேட்பாளராகிய ஜேம்ஸ் டேவிட் வான்ஸ் இந்திய வம்சாவளியான உஷா சிலுக்குரியை திருமணம் செய்துள்ளார். உஷா சிலுக்குரி காலிபோர்னியா மாகாணத்தின் சான்டியாகோ நகரில் பிறந்து வளர்ந்தவர்.
வான்ஸ் தனது வாழ்க்கை துணையான உஷாவை 2013ல் யேல் சட்ட கல்லூரியில் முதல் முதலாக சந்தித்தார். அங்கு இருவரும் ஆலோசனை குழுவை அமைக்கும் முயற்சியில் ஒன்றாக பணியாற்றி வந்தனர். 2014ல் இருவரும் திருமணம் செய்து கொண்டனர். மூன்று குழந்தைகளை பெற்றெடுத்து மகிழ்ச்சியான மண வாழ்க்கையில் ஈடுபட்டனர். உஷா சான்பிரான்ஸிஸ்கோ மற்றும் வாஷிங்டன்னில் 2015 முதல் 2017 வரை ஒரு நிறுவனத்தில் சிவில் வக்கீலாக பணி புரிந்து வந்தார். பின்னர் சுப்ரீம் கோர்ட்டிலும் பணிபுரிந்தார்.
டேவிட் வான்ஸ் தனது மனைவி உஷா சிலுக்குரி குறித்து பேசுகையில்,‛ என் மனைவி என் வாழ்வின் ஒவ்வொரு கட்டத்திலும் மிகவும் ஆதரவாகவும் அன்பானவராகவும் இருந்து வருகிறார். என் வாழ்க்கைப் பாதையில் நல் வாய்ப்புகளை தேடுவதற்கு உதவியாக இருக்கிறார்' இவ்வாறு ஜே.டி.வான்ஸ் தன் மனைவி குறித்து பெருமையாக குறிப்பிட்டுள்ளார்.
ஜேம்ஸ் டேவிட் வான்ஸ் மனைவி இந்திய வம்சாவளியைச் சேர்ந்தவராக இருப்பதால் இந்தியா அமெரிக்க நாடுகளிடையேயான நட்புறவு சிறந்து விளங்க வாய்ப்புள்ளதாக பார்க்கப்படுகிறது.
Leave a Reply
Your email address will not be published. Required fields are marked *