திருவண்ணாமலையில் மண்சரிவு- 7 பேர் உயிரிழப்பு!

- Muthu Kumar
- 03 Dec, 2024
திருவண்ணாமலை வ உ சி நகரில் மண்சரிவு ஏற்பட்ட இடத்தில் துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் நேரில் ஆய்வு செய்தார்.அப்போது உயிரிழந்த 7 பேரின் குடும்பங்களுக்கு தலா ரூ.5 லட்சம் நிவாரணம் அறிவித்தார். தொடர்ந்து பேசிய உதயநிதி ஸ்டாலின், திருவண்ணாமலையில் மிகவும் துயரமான சம்பவம் நடந்துள்ளது. எப்படியாவது நல்ல செய்தி வரும் என்று எதிர்பார்த்தோம் என்று கூறினார்.
திருவண்ணாமலையில் வ.உ.சி நகரில் பாறைகள் உருண்டு விழுந்து வீடு புதையுண்டதில் 5 குழந்தைகள் உள்பட 7 சிக்கினர். இவர்களை மீட்க 18 மணி நேரத்திற்கும் மேலாக தேசிய பேரிடர் மீட்பு குழுவினர் முயறிசியில் ஈடுபட்ட நிலையில், அனைவரும் சடலமாக கண்டெடுக்கப்பட்டுள்ளனர்.
நிலச்சரிவில் சிக்கியவர்களின் அடையாளம் தெரிந்தது. ராஜ்குமார் - மீனா தம்பதி, அவர்களின் 2 குழந்தைகள், பக்கத்து வீட்டு குழந்தைகள் மூன்று பேர் என 7 பேரும் சிக்கியிருந்தனர். உயிரிழந்தவர்கள் விவரம் ராஜ்குமார் ( வயது 32), மீனா (26), கவுதம் (9), இனியா (7), மகா ( 12), வினோதினி (14), ரம்யா (12) என 7 பேரின் அடையாளம் தெரியவந்துள்ளது.
சிறுவர்கள் 5 பேரும் தெருவில் விளையாடிக்கொண்டு இருந்துள்ளனர். அப்போது மலையில் இருந்து மழை நீரும் பாறையும் உருண்டு வந்ததை பார்த்துள்ளார்கள். உடனே அச்சம் அடைந்து பாதுகாப்பிற்காக வீட்டிற்குள் சென்றுள்ளனர். அப்போதுதான் வீட்டையும் மண் மூடிக்கொண்டு இருக்கிறது.
மண்சரிவு, பாறைகள், வீடுகளின் இடிபாடுகளுக்குள் இருந்து ஒவ்வொருவரின் உடலாக மீட்கப்பட்ட சம்பவம் அங்கு இருந்தவர்களை கண்கலங்கை வைத்தது. மீட்பு பணிகள் தொடர்ந்து நடந்து வரும் நிலையில், துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் திருவண்ணாமலை வ உ சி நகருக்கு வந்தடைந்தார்.
அப்போது மண் சரிவு ஏற்பட்ட இடத்தில் மீட்பு பணிகளை பார்வையிட்டார். தொடர்ந்து உயிரிழந்த 7 பேரின் குடும்பத்திற்கும் தலா ரூ.5 லட்சம் நிவாரணம் அறிவித்து உத்தரவிட்டார். தொடர்ந்து பேசிய உதயநிதி ஸ்டாலின், எப்படியாவது நல்ல செய்தி வரும் என்று நினைத்தோம். இப்படி நடந்திருக்க கூடாது. இது ஒரு துயரமான சம்பவம் என்று கூறினார்.
மேலும் உதயநிதி ஸ்டாலின் வ உ சி நகர் மக்கள் வெளியே வர தயார் என்றால் அரசு அவர்களுக்கு மாற்று இடம் கொடுக்க தயாராக உள்ளது. மக்கள் வெளியே வந்தால் அவர்களுக்கு என்று தனி திட்டமே போடப்படும். மண் சரிவு தொடர்பாக ஐஐடிக்கு மண் பரிசோதனை தர அறிவுறுத்தி உள்ளோம். திருவண்ணாமலையில் உண்மையாகவே துயர சம்பவம் நடந்துள்ளது. எப்படியாவது நல்ல செய்தி வரும் என்று எதிர்பார்த்தோம்இவ்வாறு உதயநிதி ஸ்டாலின் கூறினார்.
பின்னர் உதயநிதி ஸ்டாலின் வெளியிட்ட ட்வீட் பதிவில், "ஃபெஞ்சல் புயல் மற்றும் அதி கனமழை காரணமாக திருவண்ணாமலை வ.உ.சி.நகரில் வசித்து வந்த ராஜ்குமார் என்பவரது வீட்டின் மீது நேற்று மாலை 4 மணியளவில் மலையில் ஏற்பட்ட நிலச்சரிவின் காரணமாக பாறை மற்றும் கற்கள் உருண்டோடி வந்து விழுந்தன. மண்மூடிய அவரது வீட்டில், ராஜ்குமார், அவரது மனைவி மற்றும் 5 சிறுவர் - சிறுமியர் சிக்கிக் கொண்டனர்.
அவர்களை எப்படியாவது உயிருடன் மீட்டிட வேண்டும் என்ற முனைப்போடு, தேசிய பேரிடர் மீட்புக்குழு - தமிழ்நாடு மாநில பேரிடர் மீட்புக்குழு - தீயணைப்புத்துறை - காவல்துறையினர் மீட்புப் பணியில் ஈடுபட்டனர். மலை இடுக்கில் நெரிசலாக இருந்த குடியிருப்புப் பகுதியில் நடைபெற்ற இந்த சிரமமான மீட்புப் பணி 24 மணி நேரத்தைக் கடந்த நிலையில் 5 பேரின் உடல்களை மட்டுமே மீட்க முடிந்தது. இந்த செய்திகேட்டு மிகுந்த வேதனையுற்றோம். மீதமுள்ளோரின் உடல்களை மீட்கும் பணியில் மீட்புக்குழு ஈடுபட்டு வருகிறது.
இந்தச் சூழலில், விபத்து நடந்த இடத்துக்குச் சென்று அங்குள்ள நிலவரத்தை இன்று நேரில் பார்வையிட்டு, விபத்து குறித்து அதிகாரிகள் மற்றும் அங்குள்ள பொதுமக்களிடம் கேட்டறிந்தோம். நம் எல்லோரையும் சோகத்தில் ஆழ்த்திய இச்சம்பவத்தில் இறந்தோர் குடும்பத்தாருக்கு தலா ரூ.5 லட்சம் இழப்பீடு வழங்க நம் முதல்வர் ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார்கள். இழப்பீட்டினை நாளை மாலைக்குள் வழங்கிட வேண்டும் என மாவட்ட ஆட்சியரை அறிவுறுத்தியுள்ளோம். இந்தச் சம்பவத்தில் உயிரிழந்தோருக்கு ஆழ்ந்த இரங்கலைத் தெரிவிப்பதோடு, உற்றார் உறவினர்களுக்கு ஆறுதலையும் தெரிவித்துக் கொள்கிறோம். என்று கூறியுள்ளார்.
Leave a Reply
Your email address will not be published. Required fields are marked *