கட்சியின் புதிய உறுப்பினர்கள் தேர்தலில் போட்டியிடலாமா? – அன்வார் விளக்கம்

top-news
FREE WEBSITE AD

ஜொகூர் பாரு, மே 23: பி.கே.ஆர் கட்சியின் புதிய உறுப்பினர்கள் பொது மற்றும் கட்சித் தேர்தல்களில் போட்டியிட அனுமதிக்கும் திட்டம் குறித்து கட்சிக் கூட்டத்தில் மேலும் விவாதிக்கப்படும் என்று பிகேஆர் தலைவரும் பிரதமருமான டத்தோஸ்ரீ அன்வார் இப்ராஹிம் கூறினார்.

மேலும், தேர்தலில் போட்டியிடும் உறுப்பினர்களுக்கு விஷயங்களை கடினமாக்க விரும்பவில்லை என்று அன்வார் தெரிவித்தார்.

அதனால்தான், தலைமையகம் வேட்பாளர் விண்ணப்பங்களின் பட்டியலை தம்மிடம சமர்ப்பித்தபோது, ​​தாம் அனைத்தையும் அங்கீகரித்ததாக அவர் கூறினார்.

நான் சிலவற்றை மட்டும் அங்கீகரித்து, மற்றவற்றை நிராகரித்திருந்தால், அது சிக்கல்களை ஏற்படுத்தியிருக்கும். எனவே, தலைமையகத்தால் சரிபார்க்கப்பட்ட பிறகு, என் மேசைக்கு வந்த அனைத்தும், அவை திவாலானதாக அறிவிக்கப்பட்ட நபர்களை உள்ளடக்கியதா? அல்லது தவறான நடத்தை பதிவுகளுடன் தொடர்புடையதா? என்பதைத் தெரிந்துகொண்டு தாம் அங்கீகரித்ததாக அவர் கூறினார்.

இன்று பெர்ஜெயா வாட்டர்ஃபிரண்ட் ஹோட்டலில் நடந்த கட்சியின் மத்திய தலைமைத் தேர்தலின் போது நேரில் வாக்களித்த பிறகு அன்வார் செய்தியாளர்களிடம் இதனைத் தெரிவித்தார்!

Anwar Ibrahim berkata PKR akan terus bincang pelan benarkan ahli baru bertanding dalam pilihan raya. Beliau tidak mahu menyukarkan proses pencalonan dan sudah meluluskan semua permohonan selepas disemak oleh ibu pejabat parti.

ITS AD

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *