தப்ப முடியாது இனி சாலைகளில்... வந்து விட்டது AwAS

top-news
FREE WEBSITE AD

புத்ராஜெயா, ஆகஸ்ட் 8: சாலைப் போக்குவரத்துத் துறை (RTD) அரசிதழில் வெளியிடப்பட்ட இடங்களில், AwAS எனப்படும் தானியங்கி விழிப்புணர்வு பாதுகாப்பு  முறையில் கேமராக்களை கட்டம் கட்டமாக மாற்றுவதாக அதன் தலைமை இயக்குநர் Aedy Fadly Ramli  கூறினார்.

ANPR  எனப்படும் 'தானியங்கி எண் தட்டு அங்கீகாரம்'  தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தும் அண்மைய தொழில்நுட்ப மாற்றங்களுக்கு ஏற்ப தற்போதுள்ள AwAS கேமரா மாற்றியமைக்கப்பட்டுள்ளது என்றும் கேமரா சிறப்பாக செயல்படுவதாகவும் அவர் ஓர் அறிக்கையில் தெரிவித்துள்ளார்.

சாலைப் போக்குவரத்துச் சட்டம் 1987 (சட்டம் 333) இன் கீழ், விபத்துகளின் புள்ளிவிவரங்களைக் குறைக்கும் வகையில், வேக வரம்பை மீறி வாகனம் ஓட்டுதல் மற்றும் போக்குவரத்து விளக்குகளுக்கு இணங்கத் தவறிய குற்றங்களைக் கண்டறிந்து உறுதி செய்வதே AwAS கேமராக்களின் செயல்பாடு என்றும் அவர் கூறினார்.

எனவே, சாலையில் செல்லும் போது தனிப்பட்ட மற்றும் குடும்பப் பாதுகாப்பின் முன்னுரிமைக்காக பிற சாலைப் பயனாளர்களுடன் சகிப்புத்தன்மையுடன், சட்டங்களுக்கு இணங்க நடந்துகொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது.

சாலையைப் பயன்படுத்துபவர்களின் பாதுகாப்பு மற்றும் நல்வாழ்வு எப்போதும் சிறந்த அளவில் பராமரிக்கப்படுவதை உறுதிசெய்ய இந்தத் துறை எப்போதும் உறுதிபூண்டுள்ளது என்று அவர் கூறினார்!

ITS AD

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *