முதியவரை அடித்துக் கொன்ற வலது கையை இழந்தவருக்கு ஐந்தாண்டுகள் சிறை!

top-news
FREE WEBSITE AD

ஈப்போ, மே 17-

அறுபத்தேழு வயதான முதியவரை அடித்துக் கொன்ற நபருக்கு ஈப்போ உயர் நீதிமன்றம் நேற்று ஐந்தாண்டுகள் சிறைத்தண்டனை விதித்தது. சின் லிங் சின் எனும் அந்நபரின் சிறைத்தண்டனை அவர் கைதுசெய்யப்பட்ட நாளான 2022 ஆம் ஆண்டு அக்டோபர் 21ஆம் தேதி முதல் நடப்புக்கு வருகிறது. லிங் சின் (வயது 54) எனும் அந்நபர் வலது கையை இழந்தவர் ஆவார்.

பிச்சைக்காரரான அவர், 2022ஆம் ஆண்டு அக்டோபர் 21ஆம் தேதி அதிகாலை 4.50மணிக்கும் 5.50மணிக்கும் இடையில் ஈப்போவின் ஜாலான் லியோங் சின் நாம் எனும் இடத்தில் உள்ள உணவகமொன்றின் பின்புறம் லியோங் சோ வா என்பவரை அடித்துக் கொன்றார். கைகளால் குத்தியும் கால்களால் உதைத்தும் கண்ணாடிப் புட்டியினால் அடித்தும் அவரைக் கொன்றதாக லிங் சின் மீது முதலில் கொலைக் குற்றம் சுமத்தப்பட்டது. ஆனால், குற்றத்தை ஒப்புக் கொண்டதால் குறைந்த தண்டனைக்குரிய மரண விளைப்புக் குற்றச்சாட்டாக அது திருத்தம் செய்யப்பட்டது.

வீடற்றவரான லிங் சின், அந்த உணவகத்தின் பின்புறம் தரையில் படுத்து உறங்கிக் கொண்டிருந்த வேளையில், அவரிடமிருந்து 200 வெள்ளியை களவாட லியோங் முயன்றுள்ளார். அவ்வேளையில் விழித்துக் கொண்ட லிங் சின் அந்த முதியவரை சரமாரியாக அடித்துள்ளார் என்று நீதிமன்றத்தில் தெரிவிக்கப்பட்டது.

அந்த முதியவர் அடிக்கப்பட்ட காரணத்தால் மரணமடையவில்லை. ஏற்கெனவே அவர் கடுமையான இருதய நோய்க்கு ஆளாகியிருந்தார் என்று லிங் சின்னின் வழக்கறிஞர் ரஞ்சிட் சிங் சந்து தெரிவித்தார்.


Mahkamah Tinggi Ipoh menjatuhkan hukuman penjara lima tahun kepada Ling Sin, gelandangan berusia 54 tahun kerana menyebabkan kematian lelaki tua dalam kejadian pada 2022. Hukuman bermula dari tarikh tangkapan. Mangsa cuba mencuri RM200 sebelum dipukul.

ITS AD

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *