இந்து கோயிலைச் சேதப்படுத்தியவருக்கு 5 ஆண்டுகள் சிறை!

- Shan Siva
- 23 May, 2025
கோலாலம்பூர், மே 23: கம்போங் தாசேக்
அம்பாங்கில் உள்ள ஓர் இந்து கோயிலைச் சேதப்படுத்தி, ஒரு கோயில் குழு உறுப்பினரை மிரட்டிய வேலையில்லாத நபர் ஒருவருக்கு ஐந்து
ஆண்டுகள் சிறைத்தண்டனை விதிக்கப்பட்டது.
அம்பாங்க் அமர்வு
மற்றும் மாஜிஸ்திரேட் நீதிமன்றங்களில் மூன்று குற்றச்சாட்டுகளை சம்பந்தப்பட்ட 33 வயதான சுஃப்பிரியந்தி மஸ்யுஹுரி என்ற அந்த நபர் ஒப்புக்கொண்டார்.
மே 19 அன்று காலை 6 மணியளவில் அம்பாங்கில் உள்ள தேவி ஸ்ரீ மகா
காளியம்மன் கோயிலுக்குள் ஆயுதங்களுடன் வந்ததாக நீதிமன்றத்தில் அவர் மீது குற்றம்
சாட்டப்பட்டது.
தனது
வீட்டிலிருந்து சிசிடிவி காட்சிகளைக் கண்காணித்துக்கொண்டிருந்த ஒரு கோயில் கமிட்டி
உறுப்பினர், குற்றம் சாட்டப்பட்டவர் ஒரு தெய்வத்தின்
திரிசூலத்தை சேதப்படுத்துவதைக் கண்டதை அடுத்து
சம்பவ இடத்திற்கு விரைந்தார். அங்கு அவரை நோக்கி பாங்கைக் காட்டி அவரது தலையை துண்டிப்பதாக அந்நபர் மிரட்டியதாகக் கூறப்படுகிறது!
Seorang lelaki berumur 33 tahun didapati bersalah dan dipenjara lima tahun kerana merosakkan sebuah kuil Hindu di Ampang dan mengugut ahli jawatankuasa kuil dengan kekerasan menggunakan senjata pada pagi 19 Mei lalu.
Leave a Reply
Your email address will not be published. Required fields are marked *