சன்ஷான் சூறாவளியால் சூரையாடப்படும் ஜப்பான் விமான நிலையம் மற்றும் விமானம்!
- Muthu Kumar
- 31 Aug, 2024
ஜப்பான் நாட்டை சன்ஷான் சூறாவளி மிகவும் தீவிரமாக தாக்கி ஒட்டுமொத்தமாக சீர்குலைத்து வருகிறது.கியுஷு தீவில்(Kyushu Island) தரையிறங்கிய சூறாவளி போக்குவரத்து மற்றும் உள்கட்டமைப்புகளில் குறிப்பிடத்தக்க இடையூறுகளை ஏற்படுத்தியுள்ளது.
சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நிலச்சரிவு, வெள்ளம் மற்றும் ஆறுகளில் நீர் நிரம்புவதற்கான சாத்தியத்தை எச்சரித்துள்ளனர். அத்துடன் குடியிருப்பாளர்கள் விழிப்புடன் இருக்கவும் பாதுகாப்பு வழிகாட்டுதல்களை பின்பற்றவும் அறிவுறுத்தியுள்ளனர்.
இந்நிலையில் புக்குகா விமான நிலையத்தில்(Fukuoka Airport) ஒரு விமானம் தரையிறங்கும் போது சூறாவளி சன்ஷானின் தாக்கத்தால் கடும் சிரமங்களை சந்தித்தது.சூறாவளி கடுமையான வானிலை மாற்றத்தை ஏற்படுத்தியதால் விமானங்கள் இதில் பாதிக்கப்பட்டு பயணிகள் அதிர்ச்சிக்குள்ளாயினர்.
சமூக ஊடகங்களில் பகிரப்பட்ட காணொளி ஒன்றில், ஜெஜு ஏர் விமானம், எண் 1408,(Jeju Air flight, number 1408) வலுவான காற்றில் விமான நிலையத்தை நோக்கி வரும்போது வன்மையாக குலுங்கியதை பார்க்க முடிகிறது.
சிக்கலான தரையிறக்கத்தை விமானம் எதிர்கொண்ட போதிலும் ஓடுதளத்தை நோக்கிய சீரான பாதையை பராமரிக்க விமானம் முயன்றது, மேலும் விமானம் பாதுகாப்பாக தரையிறங்கியது.
Leave a Reply
Your email address will not be published. Required fields are marked *