ஜப்பான் நிலநடுக்கம்! மலேசியர்கள் விழிப்புடன் இருக்குமாறு அறிவுறுத்து!

top-news
FREE WEBSITE AD

புத்ராஜெயா, ஆகஸ்ட் 9: ஜப்பானின் கியூஷு தீவில் உள்ள மியாசாகி மாகாணத்தில் ஏற்பட்ட நிலநடுக்கத்தால் பாதிக்கப்பட்ட பகுதிகளில் உள்ள மலேசியர்கள் கடலோரப் பகுதிகளைத் தவிர்க்கவும், உள்ளூர் அதிகாரிகளின் சமீபத்திய அறிவிப்புகள் மற்றும் அறிவுறுத்தல்களுக்கு விழிப்புடன் இருக்கவும் அறிவுறுத்தப்படுகிறார்கள்.

சமீபத்திய அறிக்கையின்படி, நேற்று உள்ளூர் நேரப்படி மாலை 4:43 மணிக்கு ஏற்பட்ட 7.1 ரிக்டர் அளவிலான நிலநடுக்கத்தால் மலேசியர்கள் யாரும் பாதிக்கப்படவில்லை என்றும், சுனாமி எச்சரிக்கையைத் தூண்டியது என்றும் உறுதிப்படுத்தப்பட்டது.

டோக்கியோவில் உள்ள மலேசியத் தூதரகம் மேலும் தகவல்களைப் பெற உள்ளூர் அதிகாரிகளுடன் நெருக்கமாகக் கண்காணித்து, தீவிரமாக ஒருங்கிணைத்து வருவதாக விஸ்மா புத்ரா ஓர் அறிக்கையில் குறிப்பிட்டுள்ளது.

எந்த உயிரிழப்பும் ஏற்படவில்லை என்றாலும், சாத்தியமான காயங்கள் மற்றும் சேதங்களின் அளவை அதிகாரிகள் இன்னும் மதிப்பீடு செய்து வருகின்றனர்.

தூதரக உதவி தேவைப்படுபவர்கள் டோக்கியோவில் உள்ள மலேசிய தூதரகத்தை தொடர்பு கொள்ளலாம்,

தொடபுக்கு:  20-16, Nanpeidai-cho Shibuya-ku 150-0036 Tokyo அல்லது தொலைபேசி அழைப்பு மூலம்: +81-3-3476-3840 அல்லது +81 -80-4322-3366 (அவசரநிலை) அல்லது மின்னஞ்சல்: [email protected] மற்றும் [email protected].

ITS AD

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *