சிலாங்கூரிலும் வேப் தடை வரலாம்! இரு மாதங்களில் இறுதி முடிவு

- Shan Siva
- 19 May, 2025
ஷா ஆலம்,
மே 19: வேப் எனப்படும்
மின் சிகரெட் தொடர்பான பொருள்களைத் தடை செய்வது தொடர்பில் சிலாங்கூர் மாநில அரசு
இன்னும் இரு மாதங்களில் இறுதி முடிவை அறிவிக்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
தற்போதைக்கு சுகாதார அமைச்சு, மாநில சுகாதாரத் துறை மற்றும் ஊராட்சி மன்றங்களை உள்ளடக்கிய இரு கூட்டங்களை தாங்கள் நடத்தியுள்ளதாகப் பொது சுகாதாரம் மற்றும் சுற்றுச்சூழல் துறைக்கான
ஆட்சிக்குழு உறுப்பினர் ஜமாலியா ஜமாலுடின் கூறினார்.
தடை அமலாக்கத்தை நோக்கி தாங்கள் சென்று கொண்டிருப்பதாகவும், எனினும் அணுகுமுறை எச்சரிகையாகவும்
விரிவானதாகவும் இருக்க வேண்டும் என்று அவர் கூறினார்
வேப் மற்றும் மின் சிகிரெட் பொருள்களின் விற்பனைக்கு எதிராக
தடை விதிக்கும் பரிந்துரை வரும் மாநில சட்டமன்றக் கூட்டத்தில் பரிந்துரைக்கப்படும் என்று மந்திரி புசார் டத்தோஸ்ரீ அமிருடின் ஷாரி
முன்னதாக கூறியிருந்தார்.
அதிகமானோர் மின் சிகிரெட்டுகளுக்கு அடிமையாகி வருவதால், இது மிகப் பெரிய பிரச்சனையாக உருவெடுத்து வருகிறது. இதனைக் கட்டுபடுத்துவதற்கான விதிமுறைகளை உருவாக்குவதற்கு வலுவான ஒருங்கிணைப்பு தேவை என்றூ அவர் வலியுறுத்தியிருந்தார்.
Kerajaan Negeri Selangor akan umum keputusan larangan produk vape dalam dua bulan. Perbincangan melibatkan Kementerian Kesihatan sedang berlangsung. Kerajaan negeri menekankan pendekatan berhati-hati serta peraturan menyeluruh bagi menangani peningkatan ketagihan vape dalam kalangan rakyat.
Leave a Reply
Your email address will not be published. Required fields are marked *