பயணிகள் ரயில் மீது சரக்கு ரயில் மோதி 8 பேர் பலி !

top-news
FREE WEBSITE AD

இந்தியாவின் திரிபுரா மாநிலம் அகர்தலாவில் இருந்து மேற்குவங்கத்தில் உள்ள சியல்டாவை நோக்கி கன்ஜன்ஜங்கா விரைவு ரயில் சென்றது. 

அப்போது சற்றும் எதிர்பாராத விதமாக டார்ஜிலிங் மாவட்டத்தில் உள்ள ருயிதாஸா என்ற இடத்தில் பயணிகள் ரயில் மீது சரக்கு ரயில் பின்பக்கமாக மோதியது. இதில், பயணிகள் விரைவு ரயிலின் பெட்டிகள் தடம்புரண்டு தண்டவாளத்தில் கவிழ்ந்தன. 

தகவல் அறிந்து விரைந்த பேரிடர் மீட்பு படையினர், ரயிலுக்குள் சிக்கிய பயணிகளை மீட்கும் முயற்சியில் ஈடுபட்டனர். இதில், 8 பேர் உடல் நசுங்கி நிகழ்விடத்திலேயே உயிரிழந்தனர். மேலும், படுகாயம் அடைந்த 25 பேர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு உள்ளனர். இதில், நூலிழையில் உயிர் தப்பிய பயணி ஒருவர், ரயில் விபத்தின் கோர நிகழ்வை பகிர்ந்துக் கொண்டார். 

கன்ஜன்ஜங்கா விரைவு ரயில் விபத்து குறித்து உதவி கோருவதற்கு, பொதுமக்கள் தொடர்பு கொள்ள இலவச எண்களும் அறிவிக்கப்பட்டுள்ளன. மேலும் மீட்பு பணிகள் போர் கால அடிப்படையில் நடைபெற்று வருவதாக இந்தியாவின் மத்திய ரயில்வே அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ் மற்றும் மேற்குவங்க முதலமைச்சர் மம்தா பானர்ஜி தெரிவித்துள்ளனர். 

விபத்து நடந்த இடத்திற்கு அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ் நேரில் செல்ல உள்ளார். சிக்னலில் சரக்கு ரயில் நிற்காமல் வந்ததே விபத்திற்கு காரணம் என்று முதற்கட்ட தகவல் வெளியாகி உள்ளது. விபத்தில் சரக்கு ரயிலின் ஓட்டுநர் மற்றும் பயணிகள் விரைவு ரயிலில் இருந்த GUARD உயிரிழந்தது குறிப்பிடத்தக்கது.

ITS AD

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *