44 மூட்டை சயாம் அரிசியை கைபற்றிய கடல் போலீசார்!

- Muthu Kumar
- 26 May, 2025
கோத்தா பாரு, மே 26:
பாச்சோக், குனோங் அருகிலுள்ள கம்போங் மாளிகையில் கடல் போலீசார் மேற்கொண்ட அதிரடிச் சோதனையில் 1.1 டன் எடையுள்ள 44 மூட்டை சயாம் அரிசியை நாட்டிற்குள் கடத்தி வர மேற்கொள்ளப்பட்ட முயற்சி முறியடிக்கப்பட்டதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
நேற்று காலை 11.00 மணியளவில் மேற்கொள்ளப்பட்ட நடவடிக்கையில் இந்த அரிசி பறிமுதல் செய்யப்பட்டுள்ளதாக கடல் சார் போலீஸ் துறையின் மூன்றாம் பிராந்திய கட்டளை அதிகாரி ஏசிபி ஜூலாபெண்டி ஹசான் கூறினார்.கோத்தா பாரு- பாசீர் பூத்தே சாலையில் ஹினோ ரக லோரி ஒன்று சந்தேகத்திற்கிடமான முறையில் செல்வதை பெங்காலான் குபோர், மூன்றாம் பிராந்திய நடவடிக்கைப் படையின் உளவுப் பிரிவினர் மடக்கியதை அடுத்து இது நிகழ்ந்ததாக அவர் கூறினார்.
காவல் துறையின் வருகையை கண்டதும் அந்த லோரி ஓட்டுநர் வேகமாக தப்ப முயன்ற வேளையில், லாரியை சாலை ஓரம் நிறுத்தி வைத்துவிட்டு ஓட்டுநர் அருகில் உள்ள புதருக்குள் ஓடி மறைந்தார். இந்நிலையில் அவர் பிடிபடவில்லை என்று அவர் தெரிவித்தார்.
அந்த லோரியில் 25 கிலோ எடையுள்ள 44 மூட்டை சயாம் அரிசி இருப்பது கண்டறியப்பட்டது. அந்த அரிசி அண்டை நாட்டில் இருந்து கடத்தி வரப்பட்ட இருக்கலாம் என சந்தேகிக்கப்படுகிறது. கைப்பற்றப்பட்ட லோரி உள்ளிட்ட பொருள்களின் மொத்த மதிப்பு 84,400 வெள்ளி என மதிப்பிடப்பட்டுள்ளது.
Polis Marin mematahkan cubaan menyeludup 1.1 tan beras Siam bernilai RM84,400 di Kampung Malek, Pasir Mas. Pemandu lori melarikan diri semasa diserbu. Beras disyaki diseludup dari negara jiran. Kes disiasat lanjut.
Leave a Reply
Your email address will not be published. Required fields are marked *