செழுமையான வரலாற்றை ஒற்றுமை அமைச்சு ஆவணப்படுத்தும்! - செனட்டர் க.சரஸ்வதி நம்பிக்கை!
- Thina S
- 13 Jun, 2024
அனைத்துலக ஆவணக் காப்பக நாள் இன்று Petaling Jaya நகராண்மைக் கழக அரங்கில் சிறப்பாக நடந்தேறியது. நிகழ்ச்சியை அதிகாரப்பூர்வமாக ஒற்றுமை அமைச்சின் துணை அமைச்சர் Senator Saraswathy Kandasami தொடக்கி வைத்தார். மலேசியாவின் அரிதானப் பல்வேறு பொருள்களைச் சேகரித்து வரும் அனைத்துலகக் காப்பகக் கவுன்சிலான International Council on Archives (ICA) குழுமத்திற்கும் தேசிய ஆவணக்காப்பகமான Arkib Negara Malaysia வின் பங்களிப்பும் இன்றியமையாதது என செனட்டர் சரஸ்வதி கந்தசாமி பெருமிதம் கொண்டார்.
நாட்டின் வரலாற்றைக் குறிப்பிடும் ஒவ்வோர் பொருள்களும் நாம் காத்தருள வேண்டும் என்றும் ஒற்றுமை அமைச்சு அதற்கு முழுமையாக ஆதரவளிக்கும் என நம்பிக்கை தெரிவித்தார்.
நம் செழுமைமிக்க மலேசிய வரலாற்றை அடுத்த தலைமைத்துவத்திற்குக் கொண்டு செல்லும் பொறுப்பும் கடமையும் நமக்குண்டு, அதனை அறிந்து இம்மாதிரியான தேசிய ஆவணக் காப்பகம் செயல்படுவது மனநிறைவை அளிப்பதாக ஒற்றுமை அமைச்சின் துணை அமைச்சர் Senator Saraswathy Kandasami தெரிவித்தார்.
Leave a Reply
Your email address will not be published. Required fields are marked *