அதிகாலையில் இஸ்ரேல் பாதுகாப்பு படைகள் ஈரான் ராணுவ நிலைகள் மீது தாக்குதல்!
- Muthu Kumar
- 26 Oct, 2024
இன்று அதிகாலை ஈரானில் உள்ள இராணுவ இலக்குகள் மீது 'துல்லியமான தாக்குதல்களை' நடத்தியதாக இஸ்ரேல் இராணுவம் கூறியுள்ளது.
கடந்த அக்டோபர் 1 ம் தேதி பாலிஸ்டிக் ஏவுகணைத் தாக்குதலுக்குப் பதிலடி கொடுக்கும் வகையில் 'ஈரானில் உள்ள இராணுவ இலக்குகளை குறிவைத்து இன்று அதிகாலை வான்வழி தாக்குதலை நடத்தப்பட்டுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்தனர். ஈரானின் அரசு தொலைக்காட்சியும் தலைநகரைச் சுற்றி பல வலுவான வெடிப்புகள் கேட்டதை உறுதிப்படுத்தியது. அருகிலுள்ள கராஜ் நகரிலும் வெடிப்புச் சத்தம் கேட்டதாக ஈரானிய ஊடகங்கள் தெரிவித்துள்ளன. மேலும் இந்த தாக்குதலில் ஏற்பட்ட சேதம் குறித்து உடனடி தகவல் இல்லை.
இதுகுறித்து இஸ்ரேல் ராணுவம் எக்ஸ் தளத்தில், ஈரானில் இருந்து இஸ்ரேல் மீது தொடர்ந்து நடத்தப்பட்டு வரும் தாக்குதலுக்கு பதிலடியாக இஸ்ரேல் பாதுகாப்பு படைகள், ஈரான் ராணுவ நிலைகள் மீது குறிவைத்து தாக்குதல் நடத்தப்படுவதாக பதிவிட்டுள்ளது. நவம்பர் 5 ஆம் தேதி ஈரான் அதிபர் தேர்தல் நடக்கவுள்ள நிலையில், இஸ்ரேல் தாக்குதலை நடத்தியுள்ளது குறிப்பிடத்தக்கது. முன்னதாக ஈரான் நாட்டு அரசு தனது ராணுவ வீரர்களிடம் போருக்கு தயாராகும்படி உத்தரவிட்டது, இஸ்ரேலின் இந்த தாக்குதல் ஆகியவை போர் பதற்றத்தை அதிகரித்துள்ளதால் உலக நாடுகள் அச்சத்தில் உள்ளன.
Leave a Reply
Your email address will not be published. Required fields are marked *