ரஃபிஸிக்கு எச்சரிக்கை!

- Shan Siva
- 22 May, 2025
கோலாலம்பூர், மே 22: பிகேஆர் கட்சியின் துணைத் தலைவர் ரஃபிஸி ரம்லி நாளை உள்கட்சித் தேர்தலுக்கு முன்னதாக தனது விருப்பமான வேட்பாளர் பட்டியலை வெளிப்படையாக அறிவித்ததற்காக கட்சியின் மத்திய தேர்தல் குழுவிலிருந்து "கடுமையான" எச்சரிக்கையைப் பெறுவார் என்றும், விருப்பமான வேட்பாளர்களின் பட்டியலை வெளியிடும் ரஃபிஸியின் நடவடிக்கை கட்சியின் 2025 தேர்தல் வழிகாட்டுதல்களை மீறுவதாகவும் தேர்தல் குழுத் தலைவர் டாக்டர் ஜலிஹா முஸ்தபா தெரிவித்துள்ளார்.
எந்தவொரு சுய வகையான பிரச்சாரத்திற்கும் எதிராக மத்தியிலும் நடவடிக்கை எடுப்போம் என்று தலைமைத்துவ மன்ற அளவில் தெளிவுபடுத்தியுள்ளதாக அவர் கூறினார்.
இப்போதைக்கு, தேர்தல் சம்பந்தப்பட்டவர்களுக்கு கடுமையான எச்சரிக்கை வெளியிடப்பட்டது. பின்னர் புகார் கட்சியின் ஒழுங்குமுறைக் குழுவிற்கு பரிந்துரைக்கப்படும் என்று அவர் கூறினார்.
மொத்தம் 12 வேட்பாளர்களில் நான்கு உதவித் தலைவர் பதவிகளுக்கு தனக்கு விருப்பமான வேட்பாளர்களைப் பெயரிட்டு ரஃபிஸி ஒரு பேஸ்புக் பதிவை வெளியிட்டிருந்தார். என்பது குறிப்பிடத்தக்கது!
Rafizi Ramli menerima amaran keras daripada jawatankuasa pilihan raya PKR kerana mendedahkan senarai calon pilihan secara terbuka, melanggar panduan pilihan raya 2025. Tindakan ini boleh menyebabkan tindakan disiplin diambil oleh parti.
Leave a Reply
Your email address will not be published. Required fields are marked *