என்னை பாகிஸ்தானில் திருமணம் செய்துக் கொள்ளுங்கள்.. உளவு பார்த்த இந்திய பெண்!

- Muthu Kumar
- 22 May, 2025
பாகிஸ்தானுக்கு (Pakistan) இந்தியாவை சேர்ந்த இன்ஃப்ளூயன்சர் ஜோதி மல்ஹோத்ரா கைது செய்யப்பட்டுள்ள நிலையில், பாகிஸ்தான் உளவுத்துறை அதிகாரியுடன் அவர் பேசிய வாட்ஸ்அப் சாட் (WhatsApp Chat) வெளியாகியுள்ளது.
இந்த வாட்ஸ்அப் சாட் மூலம் அந்த இளம் பெண்ணுக்கு, பாகிஸ்தான் உளவுத்துறை அதிகாரியுடன் தனிப்பட்ட உறவு இருந்துள்ளது தெரிய வந்துள்ளது. இந்த நிலையில், ஜோதி மல்ஹோத்ரா பாகிஸ்தான் உளவுத்துறை அதிகாரியுடன் பேசியதாக வெளியாகியுள்ளது.
பஹல்காம் தாக்குதலை (Pahalgam Attack) தொடர்ந்து பாகிஸ்தானுக்கு பதிலடி கொடுக்கும் விதமாக இந்திய அரசு ஆபரேஷன் சிந்தூரை (Operation Sindoor) கையில் எடுத்தது. இந்த நிலையில், இந்தியா குறித்து சர்ச்சைக்குரிய வகையில் தகவல் பகிர்ந்த பாகிஸ்தானை சேர்ந்த யூடியூப் சேனல்களையும், சமூக ஊடக கணக்குகளையும் இந்திய அரசு முடக்கியது.
பாகிஸ்தானியர்கள் மட்டுமன்றி, இந்தியர்கள் சிலரும் ஆபரேஷன் சிந்தூருக்கும், இந்திய ராணுவத்திற்கு எதிராக தங்களது கருத்துக்களை முன்வைத்து வந்தனர். இந்த நிலையில், அவ்வாறு இந்திய ராணுவத்திற்கு எதிராக கருத்து தெரிவித்து வந்தவர்கள் மீது இந்திய அரசு மிக கடுமையான நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. அந்த வகையில், இந்தியாவை சேர்ந்த இன்ஃப்ளூயன்சர் ஜோதி மல்ஹோத்ரா பாகிஸ்தானுக்கு உளவு பார்த்ததாக காவல்துறை கைது செய்தது. ஜோதி மல்ஹோத்ரா, ஹரியானவை சேர்ந்த டிராவல் இன்ஃப்ளூயன்சர் ஆவார். இவர் டிராவல் வித் ஜோ என்ற யூடியூப் சேனலை நடத்தி வருகிறார். இவர் பாகிஸ்தானின் உளவு அமைப்புடன் தொடர்பில் இருந்ததாக கடந்த சில நாடகளுக்கு முன்பு கைது செய்யப்பட்டார்.
அவர் கைது செய்யப்பட்டது குறித்து கூறிய அதிகாரிகள் ஜோதி மல்ஹோத்ரா, பாகிஸ்தானி உளவு அமைப்பான இன்டர் சர்வீஸ் இன்டலிஜென்ஸ் (ISI - Inter Service Intelligence) அமைப்பில் பணியாற்றி வரும் அலி ஹசான் என்பருடன் தொடர்ந்து தொடர்பில் இருந்து வந்ததாக கூறியுள்ளனர். இவர்கள் இருவரும் அடிக்கடி பேசிக்கொண்டு இருந்துள்ளனர் என்பதையும் அதிகாரிகள் கண்டுபிடித்தனர்.
இந்த நிலையில் தற்போது ஜோதி மல்ஹோத்ரா மற்றும் அலி ஹசானுக்கும் இடையேயான வாட்ஸ் அப் உரையாடல் ஒன்று வெளியே வந்துள்ளது. அதில், ஜோதி மல்ஹோத்ரா அலி ஹசானிடம் என்னை பாகிஸ்தானில் வைத்து திருமணம் செய்துக்கொள்ளுங்கள் என கேட்டுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
Leave a Reply
Your email address will not be published. Required fields are marked *