பெண்களுக்கு 30% இடமளிக்காத கட்சிகளை தேர்தலில் போட்டியிட அனுமதிக்கக்கூடாது-அய்மான் அதிரா!
- Muthu Kumar
- 15 Oct, 2024
பெட்டாலிங் ஜெயா, அக். 15-
நாடாளுமன்றத்திலும் சட்டமன்றத்திலும் பெண்களுக்கு முப்பது விழுக்காடு இடங்களை ஒதுக்கும் வகையில் சட்டத்தில் திருத்தம் செய்யப்பட வேண்டும் என்று பக்காத்தான் ஹராப்பானின் மகளிர் பிரிவுத் தலைவர் அய்மான் அதிரா சாபு கோரிக்கை விடுத்துள்ளார்.
இந்த விவகாரம் தொடர்பான பரிந்துரை அமைச்சரவையிடம் சமர்ப்பிக்கப்பட வேண்டும் என்று துணையமைச்சருமான அய்மான் குறிப்பிட்டார். தேர்தலில் போட்டியிட பெண்களுக்கு குறைந்தபட்சம் முப்பது விழுக்காடு இடம் ஒதுக்கப்படுவதற்கு ஏதுவாக தேர்தல் சட்டத்திலும் விதிமுறைகளிலும் திருத்தம் செய்யப்பட வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தினார்.
பெண்களுக்கு முப்பது விழுக்காடு இடம் ஒதுக்காத கட்சிகளை தேர்தலில் போட்டியிட அனுமதிக்கக்கூடாது என்று அமானா கட்சியின் மகளிர் பிரிவுத் தலைவருமான அய்மான் வலியுறுத்தினார். இதுவரை எந்தவோர் அரசியல் கட்சியும் முப்பது விழுக்காடு பெண் வேட்பாளர்களைத் தேர்தலில் நிறுத்தியதில்லை என்றும் அவர் சுட்டிக்காட்டினார்.
Leave a Reply
Your email address will not be published. Required fields are marked *