கெஅடிலான் பொதுப் பேரவையை சீர்குலைக்க முயற்சிப்போர் மீது கட்சி நடவடிக்கை!

top-news
FREE WEBSITE AD

கப்பளா பத்தாஸ், மே 17-

அண்மையில் நடைபெற்ற கெஅடிலான் கட்சி தொகுதித் தேர்தலில் வெற்றி பெற்றவர்கள் பதவி விலகப் போவதாக அச்சுறுத்துவது அல்லது கெஅடிலான் பொதுப் பேரவையை சீர்குலைக்க முயற்சிக்கும் எந்தவொரு செயற்குழு உறுப்பினர் மீதும் கட்சி நடவடிக்கை எடுக்கலாம்.

வெற்றிப் பெற்றவர்கள் பதவி விலகி மீண்டும் தொகுதித் தேர்தல் நடத்தப்பட்டால் அதன் பின்னர் அவர்கள் போட்டியிடுவதிலிருந்து கறுப்புப் பட்டியலில் சேர்க்கப்பட வாய்ப்புள்ளதாக கெஅடிலான் கட்சியின் தகவல் பிரிவுத் தலைவர் டத்தோ ஃபாஹ்மி
ஃபட்சில் தெரிவித்தார்.

"பொதுச் செயலாளர் கூறுவது என்னவென்றால், அவர்கள் அத்தகைய நடவடிக்கையை எடுத்தால் (பதவி விலகுவதாக அச்சுறுத்தினால்), கட்சித் தேர்தல் செயற்குழு (ஜேபிபி), ஃபுசியா எடுத்த முடிவானது, மீண்டும்போட்டி தேவைப்பட்டால் நடவடிக்கையில் ஈடுபடும் அனைவரும் மீண்டும் போட்டியிடத் தடை விதிக்கப்படலாம்," என்றார் அவர்.

கடந்த மாதம் கட்சியின் தேர்தல் முடிவுகளில் அதிருப்தி அடைந்த பின்னர், பதவி விலக விரும்பிய லெங்கோங், மஸ்ஜிட் தானா தொகுதிகளின் செயற்குழு உறுப்பினர்களின் நடவடிக்கை தொடர்பில் கருத்துரைத்தபோது அவர் அவ்வாறு கூறினார்.இருப்பினும், இதில் கட்சியின் முடிவு தெரிவிக்கப்பட்டதை  அடுத்து, அவ்விரு கிளைகளின் செயற்குழு உறுப்பினர்கள் பதவி விலகுவதை மறுபரிசீலனை செய்ததாக தொடர்பு அமைச்சருமான ஃபாஹ்மி கூறினார்.

Parti KEADILAN mengancam tindakan terhadap mana-mana ahli jawatankuasa yang mengugut untuk meletak jawatan selepas pilihan raya kecil. Jika mereka berbuat demikian, mereka boleh disenaraihitam dan dilarang bertanding dalam pilihan raya akan datang.

ITS AD

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *