கட்சித் தேர்தல் எதிரொலி... அமைச்சரவையில் மாற்றமா?! – அன்வார் விளக்கம்

top-news
FREE WEBSITE AD

புத்ராஜெயா, மே 22: பி.கே.ஆர் கட்சியின் 2025  தேர்தல் என்பது கட்சிக்குள் நடக்கும் போட்டியே தவிர,  அமைச்சரவை மாற்றம் தொடர்பானது அல்ல என்று பிரதமர் டத்தோஸ்ரீ அன்வார் இப்ராஹிம் தெளிவுபடுத்தினார்.

பதவிகளுக்கு நடைபெறும்  கட்சி நிலையிலானப்  போட்டி, கட்சியை வலுப்படுத்துவதற்கு ஒரு செயல்முறையாக இருக்க வேண்டும் என்று பி.கே.ஆர் தலைவருமான அவர் கூறினார்.

மற்றவர்களின் விருப்பங்களை  நாம் தடுக்க முடியாது. அது அவரவர் விருப்பம் என்று அவர் தெரிவித்தார்.

அமைச்சரவையில் எந்த மாற்றங்களையும் செய்யும் திட்டம் தன்னிடம் இல்லை  என்று நேற்று இரவு ஸ்ரீ பெர்டானா வளாகத்தில் உள்ளூர் மற்றும் அனைத்துலக ஊடகங்களின் தலைமை ஆசிரியர்களுடனான  விளக்கமளிப்பு நிகழ்வுக்குப் பிறகு அவர் செய்தியாளர்களிடம் கூறினார்.

இந்த மாதம் நடைபெறும் பி.கே.ஆர் கட்சித் தேர்தலில் தோல்வியடைந்தால் அமைச்சரவையில் தனது பதவியை கைவிடத் தயாராக இருக்கும் பி.கே.ஆர் கட்சியின் துணைத் தலைவரும் பொருளாதார அமைச்சருமான டத்தோஸ்ரீ ரபிஸி ராம்லியின் நோக்கம் குறித்த கேள்விக்கு அன்வார் இவ்வாறு பதிலளித்தார்.

பி.கே.ஆர் தேர்தலில் துணைத் தலைவர் பதவிக்கு ரபிஸிக்கும், நூருல் இஸ்ஸா அன்வாருக்கும் இடையே நேரடிப் போட்டி நிலவுகிறது.

உள் கட்சியின்  போட்டியில் காணப்படும் மோதலை நேர்மறையாகப் பார்க்கப்பட வேண்டும் என்றும், நாட்டில் அரசியல் நிலைத்தன்மையின் எந்தக் கூறுகளையும் அது பிரதிபலிக்கவில்லை என்றும் அன்வார் கூறினார்!

ITS AD

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *