உலக நாடுகள் வியக்கும் வகையில் இந்தியா உருவாக்கிய லேசர் ஆயுதம்!

top-news
FREE WEBSITE AD

இந்தியா தயாரித்த முதல் உயர் ஆற்றல் கொண்ட லேசர் அடிப்படையிலான ஆயுதம் வெற்றிகரமாக சோதித்துப் பார்க்கப்பட்டிருக்கிறது.எதிரி நாட்டு போர் டிரோன்களை தாக்கி செயலிழக்க செய்யும் திறன் கொண்ட லேசர் அடிப்படையிலான directed energy weapon (DEW) என்ற ஆயுதம் வெற்றிகரமாக பரிசோதனை செய்து பார்க்கப்பட்டது என டிஆர்டிஓ தெரிவித்துள்ளது.

இதன் மூலம் லேசர் ஆயுதங்களை கொண்டிருக்க கூடிய ஒரு சில நாடுகளின் பட்டியலில் இந்தியாவும் இடம் பிடித்துள்ளது.இந்தியாவின் ராணுவ ஆராய்ச்சி மேம்பாட்டு அமைப்பான டிஆர்டிஓ 30 கிலோ வாட் லேசர் அடிப்படையான ஆயுதத்தை உருவாக்கியது. 360 டிகிரியில் சுழலும் எலக்ட்ரோ ஆப்டிக்கல் சென்சார்கள் கொண்ட இந்த லேசர் ஆயுதம் பரிசோதனை செய்து பார்க்கப்பட்டதாகவும் இது இலக்கினை சரியாக தாக்கியதாகவும் டிஆர்டிஓ வெளியிட்டுள்ள அறிக்கை சுட்டிக்காட்டுகிறது.

இந்த லேசர் ஆயுதமானது ஐந்து கிலோ மீட்டர் தூரத்தில் வரும் எதிரி நாட்டு டிரோன்கள் உள்ளிட்டவற்றை நடுவானிலேயே துல்லியமாக தாக்குதல் நடத்தி அளிக்கும் என சொல்லப்படுகிறது.இந்த லேசர் ஆயுதத்தை தரையில் இருந்தும் போர் கப்பல்களில் இருந்தும் ஏவ முடியும் என தகவல்கள் தெரிவிக்கின்றன. டிஆர்டிஓ தலைவர் சமிர் வி காமத், ஸ்டார் வார்ஸ் தொழில்நுட்பங்களில் தற்போது டிஆர்டிஓ பணியாற்றிக் கொண்டிருப்பதாகவும் அதில் ஒரு பகுதி தான் இந்த லேசர் ஆயுதம் என்றும் கூறியிருக்கிறார்.

இது தவிர சூர்யா என்ற பெயரில் 300 கிலோ வாட் லேசர் ஆயுதத்தை டிஆர்டிஓ தயாரித்து வருவதாக தகவல்கள் வெளியாகி இந்த சூர்யா என்ற லேசர் ஆயுதம் 20 கிலோ மீட்டர் தொலைவில் வரும் எதிரி நாட்டு போர் விமானங்கள் மீது துல்லிய தாக்குதல் நடத்தும் திறன் கொண்டதாக இருக்கும் என சொல்லப்படுகிறது. தெலுங்கானாவின் ஐதராபாத்தில் உள்ள டிஆர்டிஓவின் உயர் ஆற்றல் அமைப்புகள் மற்றும் அறிவியல் மையம் தான் இந்த லேசர் ஆயுதத்தை உருவாக்கியிருக்கிறது.

ஆந்திராவின் கர்னூல் பகுதியில் வைத்து இதனை சோதனை செய்துள்ளனர். அப்போது வாகனத்தில் பொருத்தப்பட்டிருந்த இந்த லேசர் ஆயுதம் தொலைதூரத்தில் பறக்க விடப்பட்ட டிரோன்களை துல்லியமாகக் கண்டறிந்து லேசர் ஒளியை செலுத்தி செயலிழக்கச் செய்துள்ளது.

அமெரிக்கா, ரஷ்யா மற்றும் சீனா போன்ற நாடுகளிடம் மட்டுமே இருக்கக்கூடிய இந்த தொழில்நுட்பம் தற்போது இந்தியாவிலும் பரிசோதிக்கப்பட்டு வெற்றி அடைந்துள்ளதாக அதிகாரிகள் கூறுகின்றனர். இது வெறும் ஆரம்பம் தான் என்றும், வரும் நாட்களில் இந்த தொழில்நுட்பம் அடுத்தகட்ட பாய்ச்சலை நோக்கி நகரும் என்றும் டிஆர்டிஓ தலைவர் சமிர் வி காமத் நம்பிக்கை தெரிவித்துள்ளார். 

ITS AD

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *