நடுவானில் குலுங்கிய கத்தார் விமானம் - 12 பேர் காயம்!

top-news
FREE WEBSITE AD

கத்தார் தலைநகர் தோஹாவில் இருந்து அயர்லாந்து தலைநகர் டப்ளினுக்கு சென்ற விமானம் நடுவானில் திடீரென்று குலுங்கியது.

இதில் விமானத்தில் பயணித்த 6 பயணிகள், 5 பணியாளர்கள் என 12 பேர் காயமடைந்தனர். நடுவானில் விமானம் ஏன் குலுங்கியது? அதன் பின்னணி குறித்த திடுக்கிடும் தகவல்கள் வெளியாகி உள்ளன.

கத்தார் தலைநகர் தோஹாவில் இருந்து அயர்லாந்து தலைநகர் டப்ளினுக்கு கத்தார் ஏர்வேஸ் நிறுவனத்துக்கு சொந்தமான விமானம் நேற்று புறப்பட்டது. இந்த விமானம் துருக்கி வழியாக டப்ளின் நோக்கி சென்று கொண்டிருந்தது.

விமானத்தில் பயணிகள் மற்றும் பணியாளர்கள் இருந்தனர். இந்த விமானம் துருக்கி நாட்டின் மேல்புறம் பறந்து கொண்டிருந்தது. அப்போது திடீரென்று விமானம் குலுங்கியது.

இதனால் விமானத்தில் இருந்த பயணிகள் பயந்துபோயினர். மேலும் பயணிகள் மற்றும் பணியாளர்களால் நிலையாக இருக்கையில் அமர முடியவில்லை. இருப்பினும் சாமர்த்தியமாக செயல்பட்ட விமானிகள் விமானத்தை பத்திரமாக செலுத்தி குறித்த நேரத்தில் டப்ளின் விமான நிலையத்தில் தரையிறக்கினர்.

திடீரென்று விமானம் குலுங்கியதால் 6 பயணிகள், 6 பணியாளர்கள் என மொத்தம் 12 பேர் காயமடைந்தனர். இவர்கள்  டப்ளின் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

இதுதொடர்பாக டப்ளின் விமானம் நிலையம் தனது அதிகாரப்பூர்வ எக்ஸ் பக்கத்தில், ''துருக்கி நாட்டுக்கு மேல் விமானம் வானில் பறந்தபோது ஏற்பட்ட டர்ப்பளன்ஸ் காரணமாக 6 பயணிகள் மற்றும் 6 பணயாளர்கள் என 12 பேர் காயமடைந்துள்ளனர்'' என தெரிவிக்கப்பட்டுள்ளது.

கத்தார் ஏர்லைன்ஸ் சார்பில், ''கத்தார் ஏர்வேஸ் விமானம் QR017 தோஹாவில் இருந்து பறப்பட்டு பத்திரமாக டப்ளின் விமான நிலையத்தில் நேற்று மதியம் 1 மணிக்கு முன்பு தரையிறங்கியது.

முன்னதாக விமானம் வானில் பறந்தபோது அவசர நிலையை கடந்தது. துருக்கிக்கு மேல் பறந்தபோது டர்ப்பளன்ஸ் ஏற்பட்டது. இதனால் விமானம் தரையிறங்கியதும் போலீசார், மருத்துவர்கள், மீட்பு படையினர் 6 பயணிகள், 6 பணியாளர்களை சிகிச்சைக்காக கொண்டு சென்றனர்'' என தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த சம்பவத்தால் தோஹா- டப்ளின் இடையே விமானத்தில் பயணித்த பயணிகள் அதிர்ச்சியடைந்தனர். முன்னதாக கடந்த 5 நாட்களுக்கு முன்பு 211 பயணிகள், 18 விமான ஊழியர்களுடன் லண்டனின் ஹீத்ரூ சர்வதேச விமான நிலையத்தில் இருந்து சிங்கப்பூருக்கு சிங்கப்பூர் ஏர்லைன்ஸ் விமானம் சென்றது. இந்த விமானம் நடுவானில் பயங்கரமாக குலுங்கியதில் பயணி ஒருவர் உயிரிழந்தார். 30 பேர் காயமடைந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.


ITS AD

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *