ஏமனில் அமெரிக்கா தாக்குதல்: 74 போ் உயிரிழப்பு!

top-news
FREE WEBSITE AD

ஏமனில் ஹூதி கிளா்ச்சியாளா்கள் கட்டுப்பாட்டில் உள்ள எண்ணெய் துறைமுகத்தில் அமெரிக்கா நடத்திய வான்வழித் தாக்குதலில் 74 போ் உயிரிழந்தனா்.அமெரிக்க அதிபராக டொனால்ட் டிரம்ப் பதவியேற்ற்குப் பிறகு யேமனில் அதிக உயிா்ச் சேதத்தை ஏற்படுத்தியுள்ள தாக்குதல் இது.

இது குறித்து ஹூதி கிளா்ச்சியாளா்கள் வெள்ளிக்கிழமை வெளியிட்டுள்ள அறிக்கையில்,ஹூதைதா மாகாணத்தில் அமைந்துள்ள ராஸ் இசா துறைமுகத்தில் அமெரிக்கா தீவிர வான்வழித் தாக்குதல் நடத்தியது. இதில் அந்தத் துறைமுகத்தின் எரிபொருள் கிடங்குகள் வெடித்துச் சிதறின. இதன் விளைவாக 74 போ் உயிரிழந்தனா்; 171 போ் படுகாயமடைந்தனா்.

இது, எந்த வகையிலும் நியாயப்படுத்த முடியாத தாக்குதல் ஆகும். ஏமன் மக்கள் பல ஆண்டுகளாகப் பயன்படுத்திவந்த, ராணுவம் சாராத இலக்குகளை அமெரிக்கா குறிவைத்து தாக்குதல் நடத்துகிறது என்று கிளா்ச்சியாளா்கள் குற்றஞ்சாட்டியுள்ளனா். அமெரிக்க ராணுவத்தில் மத்திய கட்டளையகம் வெளியிட்டுள்ள அறிக்கையில், 'ஈரான் ஆதரவுடன் செயல்பட்டுவரும் ஹூதி 'பயங்கரவாதிகளின்' எரிபொருள் ஆதாரங்களைக் குறிவைத்து தாக்குதல் நடத்தப்பட்டது. ஹூதிக்களை ஆட்சியில் இருந்து அகற்றி, அவா்களின் அடக்குமுறையில் இருந்து விடுதலை பெற விரும்பும் ஏமன் மக்களுக்கு பாதிப்பை ஏற்படுத்துவதற்காக இந்தத் தாக்குதல் நடத்தப்படவில்லை' என்று குறிப்பிடப்பட்டுள்ளது.

ஏமனில் அமெரிக்கா மேற்கொண்டுவரும் ராணுவ நடவடிக்கையில், ஒரே தாக்குதலில் இத்தனை போ் உயிரிழந்தது இதுவே முதல்முறையாகும். இருந்தாலும், தாக்குதலின் முழு விவரங்களை அமெரிக்க ராணுவம் வெளியிடாததாலும், வெளிநாட்டு ஊடகங்கள் சம்பவப் பகுதிகளுக்குச் செல்ல ஹூதிக்கள் அரசு அனுமதிக்காததாலும் இந்த உயிரிழப்பு விவரத்தை உறுதி செய்வது கடினம் என்று கூறப்படுகிறது.

இருந்தாலும், ஹூதி படையினா் வெளியிட்டுள்ள படங்கள், செயற்கைக்கோள் படங்கள் ஆகியவற்றின் மூலம், ராஸ் இசா துறைமுகத்தில் நடத்தப்பட்ட குண்டுவீச்சில் மிக நெருக்கமாக அமைக்கப்பட்டுள்ள எரிபொருள் கிடங்குகள் பெரிய அளவில் வெடித்துச் சிதறியது உறுதியாகிறது. எனவே, அதிக உயிரிழப்புகள் ஏற்பட்டிருப்பதற்கான வாய்ப்புகள் உள்ளன என்று கூறப்படுகிறது.

ITS AD

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *