இந்தியாவில் யுபிஐ ஆப்களில் மிகப்பெரிய தாக்கத்தை ஏற்படுத்திய நவி யுபிஐ ஆப்!

top-news
FREE WEBSITE AD

கூகுள் பே (Google Pay), போன்பே (PhonePe) போன்ற யுபிஐ (UPI) ஆப்கள் வந்த பிறகு பெட்டிக்கடை முதல் சூப்பர் மார்கெட் வரையில் டிஜிட்டல் பரிவர்த்தனை வந்துவிட்டது.ரூ.10-க்கு டீ வங்கினால் கூட கூகுள் பே இருக்கா? போன்பே இருக்கா? என்று கேட்க தொடங்கிவிட்டோம். இப்படிப்பட்ட யுபிஐ ஆப்களில் மிகப்பெரிய மாற்றம் வந்துவிட்டது.

உண்மையில், யுபிஐ ஆப்கள் மூலம் பணம் அனுப்பினால் அதற்கு கட்டணங்கள் கிடையாது. ரூ.100-க்கும் கீழ் பணம் அனுப்பினாலும் அதற்கு நீங்கள் கட்டணம் செலுத்த வேண்டியது கிடையாது. இதனாலேயே கூகுள் பே, போன்பே, பேடிஎம், அமேசான் பே போன்ற யுபிஐ ஆப்களை கண்ணை மூடிக்கொண்டு பேங்க் கஸ்டமர்கள் பயன்படுத்த தொடங்கிவிட்டனர்.

ஆனால், கூகுள் பே போன்ற பன்னாட்டு நிறுவன ஆப் மற்றும் போன்பே மூலம் அதிகளவிலான யுபிஐ பரிவர்த்தனை நடப்பதால் மத்திய அரசு அதை கட்டுப்படுத்த பீம் யுபிஐ (BHIM UPI) ஆப் மற்றும் இதர உள்நாட்டு யுபிஐ ஆப்கள் ஊக்குவிப்பு செய்து வருகிறது. இப்போது, கூகுள்பே, போன்பே, பேடிஎம் மட்டுமல்லாமல், பீம் ஆப்புக்கே போட்டி உருவாகிவிட்டது.

யுபிஐ சர்க்கிள் (UPI Circle) போன்று குடும்ப உறுப்பினர்களுடன் யுபிஐ ஆப்-ஐ பகிர்ந்து கொள்ளும் அம்சங்களை கொண்ட மத்திய அரசின் பீம் யுபிஐ ஆப்-ஐ ஒரே வருடத்தில் பின்னுக்கு தள்ளி இந்தியாவின் நான்காவது மிகப்பெரிய யுபிஐ பரிவர்த்தனை ஆப்-ஆக நவி யுபிஐ (Navi UPI) வந்துவிட்டது. இதை இந்திய தேசிய கொடுப்பனவு கழகம் (National Payments Corporation of India) உறுதிசெய்துள்ளது.

நவி யுபிஐ ஆப் மூலம், யுபிஐ பரிவர்த்தனைகள் மட்டுமல்லாமல், கேஷ் லோன், டிஜிட்டல் கோல்டு, மியூச்சுவல் ஃபண்டு, ஹெல்த் இன்சூரன்ஸ் போன்ற பல்வேறு சேவைகள் வழங்கப்படுகின்றன. யுபிஐ லைட் (UPI Lite) போன்ற பீச்சர்களும் இதில் இருக்கிறது. இந்திய தேசிய கொடுப்பனவு கழகம், அப்ரூவல் பெற்றிருப்பதால், பேங்க் கஸ்டமர்கள் அதிகளவில் பரிவர்த்தனை செய்கின்றனர்.

இந்த நவி யுபிஐ ஆப் வளர்ந்துவருவதால், அதன் சொந்த நிறுவனமானது வருவாய் எதிர்பார்க்காமல், அனைத்து பரிவர்த்தனைகளுக்கும் எந்தவித கட்டணங்களையும் விதிக்கவில்லை. வெறும் ரூபாய் 1 செலவு செய்தாலும் அதற்கு கட்டணங்கள் கிடையாது. கூகுள் பே, போன்பே, பேடிஎம் ஆப்களுக்கு அடுத்ததாக இந்த நவி யுபிஐ ஆப் இடத்தை பிடித்து இருக்கிறது.

அக்டோபர் மாதத்தில் யுபிஐ ஆப்கள் மூலம் நடந்த பரிவர்த்தனைகளை என்சிபிஐ (NCPI) கொடுத்துள்ளது. இதில் போன்பே, கூகுள் பே மற்றும் பேடிஎம் ஆப்கள் முதல் மூன்று இடத்தை பிடித்துள்ளன. இதற்கு அடுத்தபடியான 157.51 மில்லியன் பரிவர்த்தனைகளுடன் நவி யுபிஐ ஆப் நான்காவது இடத்துக்கு வந்துள்ளது. இது பீம் யுபிஐ ஆப்-ஐ விட பல மடங்கு அதிகமாக இருக்கிறது.

ஆகவே, வரும் மாதங்களில் நவி யுபிஐ ஆப் ஆனது கூகுள் பே, போன்பே, பேடிஎம் ஆகிய ஆப்களுக்கு மிகப்பெரும் போட்டியை உருவாக்க இருக்கிறது. யுபிஐ ஆப்களுக்கு பேங்க் கஸ்டமர்கள் மாற தொடங்கிய போது, அவர்களுக்கு கேஷ்பேக், ரிவார்ட்கள் மற்றும் கூப்பன்கள் கொடுக்கப்பட்டன. அதே ஆஃபர்களை நவி யுபிஐ ஆப் இப்போது தொடங்கி கஸ்டமர்களை பிடிக்கிறது.

யுபிஐ பரிவர்த்தைகள் வருடத்துக்கு வருடம் அதிகரித்து வருகிறது. ஒட்டுமொத்த பேங்க் கஸ்டமர்களும் யுபிஐ மூலம் பரிவர்த்தனை செய்ய தொடங்கிவிட்டனர். இப்போது கிராமங்களிலும் யுபிஐ ஆப்களின் சேவை கிடைக்கின்றன. இதனால், இந்த யுபிஐ சேவை மார்கெட்டில் கடும் போட்டி தொடங்கி இருக்கிறது. இதனால் கஸ்டமர்களுக்கு பல்வேறு தேர்வு இருக்கும்.

இதற்கு மத்திய அரசின் கீழ் செயல்படும் ரிசர்வ் பேங்க் ஆப் இந்தியா மற்றும் இந்திய தேசிய கொடுப்பனவு கழகம் ஆகிய ஊக்குவிப்பு காரணமாகும். கூகுள் பே, போன்பே போன்ற இரண்டு நிறுவனங்களிடம் மட்டும் அதிகப்படியான யுபிஐ பரிவர்த்தனைகள் செய்யப்படுவதை கட்டுப்படுத்தவே இதுபோன்ற ஆப்கள் ஊக்குவிக்கப்படுகின்றன. இனிமேல் ரூ.100 அனுப்ப கூட பல்வேறு ஆப்களை வைத்துள்ளது.


ITS AD

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *