ஃபாஹ்மி ஃபட்சிலின் தென் கொரிய பயணத்தில் சாதகமான ஒப்பந்தங்கள்!

top-news
FREE WEBSITE AD

பூசான், அக். 5-

நேற்று நிறைவடைந்த தொடர்பு அமைச்சர் ஃபாஹ்மி ஃபட்சில் மேற்கொண்ட தென் கொரியாவிற்கான மூன்று நாள்கள் அலுவல் பயணம் மலேசியாவிற்கு கூடுதல் மதிப்பை அளித்துள்ளது. அப்பயணத்தின்போது தொலைத் தொடர்பில் செயற்கை நுண்ணறிவு, ஏ.ஐ பயன்பாட்டை மேம்படுத்துதல் உட்பட நாட்டின் திரைப்படத் துறையின் தரத்தை உயர்த்துவதற்கான சில உத்திகளும் பெறப்பட்டன.

கடந்த திங்கட்கிழமை தொடங்கிய இப்பயணம் குறுகியகாலமாக இருந்தாலும், பல சந்திப்புகள் மற்றும் தொலைத் தொடர்பு நிறுவனங்களுடன் புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் கையெழுத்தாகியதன் மூலம் சாதகமாக அமைந்துள்ளது. 2019ஆம் ஆண்டு கையெழுத்திடப்பட்ட தகவல் தொழில்நுட்பம்
மற்றும் தொடர்புதுறை, ஐ.சி.டி-இல் இருவழி ஒத்துழைப்பை உள்ளடக்கிய புரிந்துணர்வு ஒப்பந்தத்தின் உள்ளடக்கத்தை மேம்படுத்த மலேசியாவும் தென் கொரியாவும் இணக்கம் தெரிவித்தன.

இதனிடையே, ஒவ்வொரு திரைப்படத்திற்கும் நுழைவுச் சீட்டு விற்பனையின் எண்ணிக்கை தொடர்பாக திரைப்பட தயாரிப்பாளர் களிடமிருந்து துல்லியமான தரவைப் பெற, மலேசியாவில் திரையரங்கு தகவல் அமைப்புகள் பயன்படுத்தப்படுவதை ஆய்வு செய்யுமாறு மலேசிய தேசிய திரைப்பட மேம்பாட்டுக் கழகத்தை ஃபாஹ்மி கேட்டுக் கொண்டார்.


ITS AD

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *