திமுகவை வீழ்த்த சீமானுக்கு நேரடியாக அழைப்பு விடுத்த நயினார் நாகேந்திரன்!

- Muthu Kumar
- 17 Apr, 2025
தமிழக பாஜக கட்சியின் மாநில தலைவர் நயினார் நாகேந்திரன் சீமானை கூட்டணிக்கு அழைப்பு விடுத்துள்ளார். தேசிய ஜனநாயக கூட்டணிக்கு இன்னும் கட்சிகளை எதிர்பார்க்கிறோம்.
இது குறித்து அவர் கூறுகையில் திமுக அரசை மாற்ற வேண்டும் மாற்று அரசாங்கம் தேவை.இதற்காக எந்த கட்சி வந்தாலும் கூட்டணிக்காக நாங்கள் சேர்த்துக்கொள்வோம். எல்லோருமே கூட்டணிக்கு வரவேண்டும். நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமானும் திமுகவை வீழ்த்த வேண்டும் என்று நினைக்கிறார். மாறுபட்ட கொள்கைகளைக் கொண்ட கட்சிகள் கடந்த காலங்களில் கூட்டணி அமைத்ததற்கு ஏராளமான உதாரணங்கள் இருக்கிறது.
எனவே நான் சீமானையும் கூட்டணிக்கு அழைக்கிறேன் என்று கூறினார். மேலும் சமீப காலமாக சீமான் பாஜகவுக்கு ஆதரவாக செயல்பட்டு வரும் நிலையில் தற்போது அவரை நேரடியாகவே மாநில தலைவர் கூட்டணிக்கு அழைத்துள்ளது அரசியல் வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
இந்த நிலையில் அவர் என்ன முடிவு எடுக்க போகிறார் என்று எதிர்பார்ப்பு எழுந்துள்ளது. அதே நேரத்தில் சீமான் எந்த கட்சியுடன் கூட்டணி வைக்க மாட்டேன் என்றும்,வைத்தால் அமெரிக்க அதிபர் ட்ரம்புடன் மட்டும்தான் கூட்டணி வைப்பேன் என்றும் கூறி வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கதாகும்.
Leave a Reply
Your email address will not be published. Required fields are marked *