PUTRA HEIGHTS வெடிப்பு விசாரணையில் சிலாங்கூர் அரசு அலட்சியம்! - Azmin Ali குற்றச்சாட்டு!

- Sangeetha K Loganathan
- 09 Jul, 2025
ஜூலை 9,
PUTRA HEIGHTS எரிவாயு வெடிப்பிற்குக் காரணம் சிலாங்கூர் மாநில அரசு என்பதை மறைக்க வேண்டாம் என சிலாங்கூர் மாநில எதிர்கட்சித் தலைவரும் முன்னாள் மெந்திரி பெசாருமான Datuk Seri Azmin Ali இன்று வலியுறுத்தினார். எரிவாயு வெடிப்பிற்கு முக்கிய காரணம் நில அமிழ்வு என்றும் எரிவாயு குழாயில் ஏற்பட்ட கோளாறு என விசாரணை அறிக்கையில் குறிப்பிடப்பட்டிருப்பதை Datuk Seri Mohamed Azmin Ali சுட்டிக்காட்டினார். ஆனால் சம்மந்தப்பட்ட பகுதியில் கட்டுமானப் பணிகளை மேற்கொண்டிருப்பதைப் பற்றிய எந்தவொரு தகவலும் விசாரணை அறிக்கையில் இடம்பெறாதது ஏன் என Datuk Seri Mohamed Azmin Ali கேள்வி எழுப்பினார்.
உண்மையில் சுபாங் ஜெயா நகராண்மைக் கழகம் சம்மந்தப்பட்ட கட்டுமானப் பணிகளுக்கு அனுமதியளித்திருக்கிறது. கட்டுமான நிறுவனமும் மேம்பாட்டுப் பணிகளை மேற்கொண்டிருக்கிறது. ஆனால் அந்த அனுமதியானது ஜனவரி 8 ஆம் திகதியுடன் நிறைவடைந்தும் சம்மந்தப்பட்ட நிறுவனம் கட்டுமானத்தை நிறுத்தாமல் தொடர்ந்து நிலத்தை சுரண்டியிருப்பதாகவும் இதனால் கழிவு நீர் குழாய்கள் சேதமடைந்திருப்பதாக 27 மார்ச் பொதுமக்கள் புகார் அளித்ததையும் சிலாங்கூர் மாநில எதிர்கட்சித் தலைவர் Datuk Seri Azmin Ali சுட்டுக்காட்டினார்.
Datuk Seri Azmin Ali mendakwa kerajaan negeri Selangor cuai dalam menangani punca letupan gas Putra Heights. Beliau mendakwa laporan siasatan gagal menjelaskan kerja pembinaan yang didakwa melanggar kelulusan dan merosakkan paip, punca kebocoran berlaku.
Leave a Reply
Your email address will not be published. Required fields are marked *