மலேசியர்களின் ஒற்றுமைக்குத் தேசியமொழி முக்கியப்பங்காற்றுகிறது! - துணை அமைச்சர் K.SARASWATHY
- Tamil Malar (Reporter)
- 28 Aug, 2024
மலேசியர்களின் ஒற்றுமைக்குத் தேசிய மொழி மூலதனமாக விளங்குவதாகத் தேசிய ஒற்றுமை துறை துணையமைச்சர் செனட்டர் சரஸ்வதி கந்தசாமி தெரிவித்தார். மலேசியர்கள் தேசிய மொழியில் புலமை பெறுவதோடு அந்த மொழியின் மீது பற்றுக் கொள்ள வேண்டும் என அவர் வலியுறுத்தினார்.
இன்று துவாங்கு பைனுன் ஆசிரியர் கல்வியகத்தில் மலேசியா மடானி ஒற்றுமை கருத்தரங்கப் போட்டி நிறைவு விழாவை அதிகாரப்பூர்வமாகத் தொடக்கி வைத்த தேசிய ஒற்றுமை துறை துணையமைச்சர் செனட்டர் சரஸ்வதி கந்தசாமி நாட்டில் மலேசியர்கள் மலாய் மொழியில் புலமைப் பெற இது போன்ற கருத்தரங்கு மிக அவசியம் என்பதை உணர்ந்துள்ளதாக அவர் தெரிவித்தார். மலாய் மொழியை ஊக்குவிக்கும் இது போன்ற நிகழ்ச்சிகளுக்கு தமது தேசிய ஒற்றுமை துறை அமைச்சு முழுமையான ஆதரவை வழங்கும் என் அவர் குறிப்பிட்டார்.
தேசிய ஒற்றுமை துறை அமைச்சின் நன்றாக பேசுங்கள் பிரச்சாரத்தின் ஒரே காலகட்டத்தில் இந்த கருத்தரங்கு நடைபெறுவது மிக பொருத்தமாக அமைந்துள்ளதாக அவர் சுட்டிக் காட்டினார். மலேசியர்கள் ஒருவருடன் ஒருவர் தொடர்பு கொள்ளும் போது பண்பாக பேச வேண்டும் என்ற நோக்கில் தான் இந்த பிரச்சாரம் நடத்தப்படுவதாக அவர் சொன்னார். நம்மிடையே கருத்து வேறுபாடுகள் இருக்கலாம், ஆனால் அது குறித்து பேசும் போது பண்பாகவும் பணிவான முறையிலும் பேசுதல் வேண்டும் என அவர் கேட்டுக்கொண்டார். அதேவேளையில் இளைய தலைமுறையினர் தேசிய மொழி மீது அதிக பற்றுக் கொள்ள வேண்டும். மேலும் தேசிய மொழியில் புலமை பெற அதிக முயற்சிகள் எடுத்துக் கொள்ள வேண்டும் என அவர் ஆலோசனை கூறினார்
Leave a Reply
Your email address will not be published. Required fields are marked *