திரெங்கானுவில் அதிகரிக்கும் உடல் பருமன் தொல்லை! - சுகாதாரத்துறை வருத்தம்
 (1).jpg)
- Shan Siva
- 17 May, 2025
கோல திரெங்கானு, மே 17: திரெங்கானுவின்
மக்கள்தொகையில் சுமார் 76 விழுக்க்காட்டினர், அதாவது 13 லட்சம்
குடியிருப்பாளர்களில் 988,000 பேர், அதிக எடை அல்லது பருமனாக இருப்பதாக மாநில
சுகாதாரத் துறை தெரிவித்துள்ளது.
இந்த எண்ணிக்கை 2011 இல் பதிவு செய்யப்பட்ட 60.8% இலிருந்து 15.2% அதிகம் என்று மாநில சுகாதாரத் துறை இயக்குனர் டாக்டர்
காசேமணி எம்போங் தெரிவித்தார்.
மாநிலத்தில்
மூன்று பதின்ம வயதினரில் ஒருவர், அல்லது 30% க்கும் அதிகமானோர், எடை பிரச்சினைகளால் அவதிப்படுகிறார்கள் என்பது மேலும்
கவலைக்குரியது. இது பெரும்பாலும் ஆரோக்கியமற்ற உணவுப் பழக்கம் மற்றும் உட்கார்ந்த நிலையிலான
வாழ்க்கை முறையே காரணமாகும் என்று அவர்
கூறினார்.
இந்தப் போக்கு,
ஏற்கனவே மாநிலத்தில் பரவலாக உள்ள நீரிழிவு,
இதய நோய், சிறுநீரகப் பிரச்சினைகள் மற்றும் உயர் இரத்த அழுத்தம் போன்ற
நோய்களின் (NCDs) அபாயத்தை மேலும்
அதிகரிக்கக்கூடும் என்று அவர் எச்சரித்தார்.
பதின்ம வயதினர் மத்தியில் கெஜெட்களின் தொடர்ச்சியான பயன்பாடும், ஆரோக்கியமற்ற உணவு எளிதில் கிடைப்பதும் இந்தப் பிரச்சினைக்கு முக்கிய காரணம் என்று இன்று டத்தாரான் பத்து புருக்கில் 2025 உடல் பருமன் விழிப்புணர்வு பிரச்சாரத்துடன் இணைந்து நடத்தப்பட்ட ஒரு நிகழ்வில் அவர் இதனைத் தெரிவித்தார்!
Di Terengganu, 76% penduduk mengalami masalah berat badan berlebihan. Gaya hidup tidak aktif dan tabiat pemakanan tidak sihat menyumbang kepada peningkatan obesiti, terutama dalam kalangan remaja. Keadaan ini meningkatkan risiko penyakit tidak berjangkit seperti diabetes dan darah tinggi.
Leave a Reply
Your email address will not be published. Required fields are marked *