அபுதாபி இளவரசர் ஷேக் ஹஸ்ஸா காலமானார்!

top-news
FREE WEBSITE AD

அபுதாபி இளவரசர் ஷேக் ஹஸ்ஸா பின் சுல்தான் பின் சயீத் அல் நஹ்யான் நேற்று காலமானதாக அபுதாபி அதிபர் அலுவலகம் தெரிவித்துள்ளது.

ஷேக் ஹஸ்ஸா பின் சுல்தான் பின் சயீத் அல் நஹ்யானின் வயது குறித்து தகவல் ஏதும் வெளியிடப்படவில்லை. இவர் குதிரை சவாரி செய்யும் திறமை கொண்டவர் என பார்க்கப்படுகிறது. அவரது அசாதாரண குதிரை ஏற்ற திறமைக்காக குதிரையேற்ற வட்டாரங்களில் புகழ் பெற்றதாக கூறப்படுகிறது. ஷேக் ஹஸ்ஸா பின் சுல்தான் பின் சயீத் அல் நஹ்யானுக்கு, அபுதாபியின் ஷேக் சுல்தான் பின் சயீத் முதல் மசூதியில் ஏராளமான ஷேக்குகளும், பிற மக்களும் வியாழக்கிழமை பிற்பகல் அல் பாடீன் கல்லறையில் இறுதிச் சடங்குகளை செய்தனர்

ஐக்கிய அரபு எமிரேட்ஸை தளமாகக் கொண்ட பல சமூக ஊடக கணக்குகளும் ஷேக் ஹஸ்ஸாவின் மறைவுக்கு இரங்கல் தெரிவித்தனர். அபுதாபியின் பட்டத்து இளவரசர் ஷேக் கலீத் பின் முகமது பின் சயீத் அல் நஹ்யான், ஐக்கிய அரபு எமிரேட்ஸ் அதிபர் ஷேக் முகமது பின் சயீத் அல் நஹ்யானின் மூத்த மகனாவார். அபுதாபியின் ஆளும் நஹ்யான் குடும்பத்தைச் சேர்ந்த பலர் இறுதிச் சடங்குகளில் கலந்து கொண்டனர்

ITS AD

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *