தொடர்ந்து தமிழகத்தை வஞ்சிக்கும் பா.ஜ.க! மு.க.ஸ்டாலின் சாடல்

- Shan Siva
- 27 Feb, 2025
தமிழ்நாட்டின் வளர்ச்சியைத் தடுக்கும் வஞ்சகத்தை மோடி தலைமையிலான ஒன்றிய பா.ஜ.க. அரசாங்கம் தொடர்ந்து செயல்படுத்தி வருவதாகதிமுக தலைவரும், தமிழக முதல்வருமான மு.க. ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக
அவர் அக்கட்சியின் தொண்டர்களுக்கு எழுதியுள்ள கடிதத்தில், “தமிழர்களின் தனித்துவமான குணம் என்பது
சுயமரியாதை உணர்வு. அதனைச் சீண்டிப் பார்க்க எவர் நினைத்தாலும் அனுமதிக்க
மாட்டோம். ‘இந்தி எழுத்துகளை அழித்துவிட்டால் வடமாநிலப் பயணிகள் எப்படி ரயில்
நிறுத்தங்களை அடையாளம் காண்பார்கள்?’ என்று இங்கேயுள்ள
பா.ஜ.க. நிர்வாகிகள் சிலர் கேட்கிறார்கள். அவர்களுடைய இந்த உணர்வு நியாயமாகத்
தமிழ் மீது இருந்திருக்க வேண்டும். நீதிக்கட்சியின் தலைவராக இருந்த ஏ.டி.
பன்னீர்செல்வமும், மறைமலையடிகள் போன்ற
தமிழறிஞர்களும், தந்தை பெரியாரின்
சுயமரியாதை இயக்கத்துடன் இணைந்து நின்று 1937 முதல் 1939 வரையிலான காலகட்டத்தில் முதல் இந்தி ஆதிக்க
எதிர்ப்புப் போராட்டத்தில் முதன்மையாக நின்றனர்.
சென்னை மாகாணமாக
இருந்த அன்றைய தமிழ்நாடெங்கும் ஆதிக்க இந்திக்கு எதிராக கண்டனக் கூட்டங்கள்
நடைபெற்றன. மாநாடுகள் நடத்தப்பட்டன. துறையூரில் 1937ஆம் ஆண்டு
நடைபெற்ற சுயமரியாதை மாநாட்டிற்குத் தலைமையேற்றவர் 28 வயது இளைஞரான
அறிஞர் அண்ணா. இந்தி மொழியைக் கட்டாயப் பாடமாக்கிய அன்றைய இராஜாஜி அரசின் செயலை
வரவேற்றதுடன், மேல்நிலை வகுப்புகளில்
சமஸ்கிருதத்தை விருப்பப் பாடமாக வைக்க வேண்டும் என்று பத்திரிகைகளில் தலையங்கங்கள்
எழுதப்பட்டன. காங்கிரஸ் தலைவரான சத்தியமூர்த்தி, ‘வருணாசிரம தர்மம்
காப்பாற்றப்படவும், கிராம ராஜ்ஜியம்
ஏற்படவும் சமஸ்கிருதத்தைக் கட்டாயப் பாடம் ஆக்க வேண்டும்’ என்று கூறினார்.
இவற்றையெல்லாம் எதிர்த்துதான் பெரியார் தலைமையில் போராட்டக் களம் புகுந்தனர்
தமிழர்கள்.
மும்மொழிக்
கொள்கை என்ற பெயரில் தமிழையும் தமிழர் பண்பாட்டையும் சிதைக்க நினைக்கும் ஒன்றிய
பா.ஜ.க அரசினுடைய திட்டத்தின் உள்நோக்கத்தைப் புரிந்து கொண்டு தமிழ்நாடு
முழுவீச்சாக இன்றைக்கு எதிர்க்கிறது என்றால், அதற்கான
அடித்தளத்தைத் திராவிட இயக்கத் தலைவர்கள் அன்றைக்கே வலுவாகக்
கட்டமைத்திருக்கிறார்கள். திமுக தொண்டர்களுக்கு உங்களில் ஒருவனான நான் இந்தக்
கடிதத்தை எழுதும் வேளையில், திமுக
மாணவரணியின் முன்னெடுப்பில், ஆர்ப்பாட்டம்
நடத்திய செய்திகளைத் தொலைக்காட்சிகள் வாயிலாகப் பார்க்க முடிந்தது’ என்று குறிப்பிட்டுள்ளார்!
Leave a Reply
Your email address will not be published. Required fields are marked *