RM 3.36 Million மதிப்பிலானப் போதைப்பொருள் பறிமுதல்! – நால்வர் கைது!

top-news
FREE WEBSITE AD

நேற்று மாலை 1.15 மணியளவில் போதைப்பொருள் தடுப்பு ஆணையத்தின் அதிகாரிகள் நடத்திய சோதனையில் 105 கிலோ எடையிலான syabu வகை போதைப்பொருள் பறிமுதல் செய்யப்பட்டதாக Sarawak மாநிலக் காவல் துறை தலைவர் Datuk Mancha Ata தெரிவித்தார்.

பறிமுதல் செய்யப்பட்ட போதைப்பொருளின் மதிப்பு RM3,360,640.00 என கணக்கிடப்பட்டுள்ள நிலையில் 3 உள்ளூர் ஆடவர்களையும் ஒரு வெளிநாட்டுப் பெண்ணையும் கைது செய்துள்ளதாக அவர் தெரிவித்தார், 26 வயதான வெளிநாட்டுப் பெண் கொடுத்த வாக்குமூலத்தின் அடிப்படையில் பறிமுதல் செய்யப்பட்ட போதைப்பொருள்கள் தீபகற்ப மலேசியாவில் உள்ள ஒரு தனியார் நிறுவன உரிமையாளரிடமிருந்து பெறப்பட்டதாகவும் கடல் வழியாக சரவாக்கிற்குள் கொண்டு வந்ததாகவும் தெரிய வந்துள்ளது.

கைது செய்யப்பட்ட உள்ளூர் ஆடவர்கள் மூவரும் amphetamine வகை போதைப்பொருள் பயன்படுத்தியிருப்பதாகவும் வெளிநாட்டுப் பெண் methamphetamine வகை போதைப்பொருள் பயன்படுத்தியிருப்பதாகவும் தெரிய வந்துள்ளதுகைது செய்யப்பட்டுள்ள நால்வரும் இடைத்தரகர்கள் தான் என்பாதகவும் தலா 3,500 ரிங்கிட் சம்பளத்திற்குப் போதைப்பொருளைக் கைமாற்றியதாகவும் Sarawak மாநிலக் காவல் துறை தலைவர் Datuk Mancha Ata இன்று தெரிவித்தார்.

ITS AD

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *