கடந்தாண்டில் 142,000 இளைஞர்களின் அடையாள அட்டைகளைக் காணவில்லை!

- Muthu Kumar
- 20 May, 2025
புத்ராஜெயா, மே 20
கடந்த ஆண்டு 15 முதல் 30 வயதுக்குட்பட்ட ஒரு லட்சத்து 42 ஆயிரத்திற்கும் மேற்பட்ட இளைஞர்களின் அடையாள அட்டைகளை காணவில்லை என்று புகாரளிக்கப்பட்டுள்ளது.
ஒட்டுமொத்தமாக காணாமல் போன, இரண்டு லட்சத்து 85 ஆயிரம் அடையாள அட்டைகளில் இந்த எண்ணிக்கை ஐம்பது விழுக்காடாகும் என்று தேசிய பதிவுத் துறையின் பதிவு காட்டுவதாக இளைஞர், விளையாட்டு அமைச்சர் ஹன்னா இயோ தெரிவித்தார்.
இந்த எண்ணிக்கை மிகவும் கவலை அளிப்பதாகக் கூறிய ஹன்னா இதில் ஒரு லட்சத்து 36 ஆயிரம் பேர் அலட்சியத்தாலும் மற்றவர்கள் குற்றச்செயல், இயற்கை பேரிடர் காரணமாகவும் தங்களின் அடையாள அட்டையைத் தொலைத்திருப்பதாக அவர் தெரிவித்தார்.
அதிலும் சிலாங்கூர்,கோலாலம்பூர், ஜொகூர் ஆகிய பகுதிகளிலேயே அதிக எண்ணிக்கையிலான சம்பவங்கள் பதிவாகியுள்ளன என்றும் அவை நகர்ப்புறங்களில் வணிக நடவடிக்கைகளுடன் தொடர்புடையவை எனவும் ஹன்னா யோ கூறினார்.
"இது மிகவும் கவலை அளிப்பதாக உள்ளது. ஏனெனில் ஒவ்வொரு மலேசிய குடிமகனுக்கு அடையாள அட்டை என்பது இன்றியமையாததாகும். இது வெறும் அடையாள ஆவணம் மட்டுமல்ல. எனவே
இளைஞர்கள் கவனக்குறைவாக இருந்தால், அடையாள அட்டை திருட்டு, மோசடிகள், வங்கிக் சுணக்குகளைத் திறப்பது போன்ற அனைத்து ஆபத்துகளும் இருக்கும். இவை அனைத்து நடவடிக்கைகளுக்கும் அவர்களின் அடையாள அட்டையைப் பயன்படுத்துகின்றனர்.
இரண்டாவதாக அடையாள அட்டை இல்லாவிடில், அதிகாரப்பூர்வ விவகாரங்களில் ஈடுபடுவது சிரமமாகும். மூன்றாவதாக, மாற்றுவதற்கான நேர, பண விரயம். நான்காவதாக மன அழுத்தம் ஏற்படும்," என்றார் அவர்.இந்தப் பிரச்சினைக்கு விரைந்து தீர்வு காண தேசியப் பதிவுத்துறை உடனான வியூக ஒத்துழைப்பின் வழி, பல்வேறு ஆதரவு நடவடிக்கைகளை இளைஞர், விளையாட்டு அமைச்சு தொடர்ந்து மேற்கொள்ளும்.நேற்று புத்ராஜெயாவில் நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பில் ஹன்னா தெரிவித்தார்.
Lebih 142,000 MyKad hilang melibatkan belia berusia 15–30 tahun, merangkumi 50% daripada jumlah keseluruhan. Menteri Hannah Yeoh menyuarakan kebimbangan dan menggesa kerjasama strategik dengan JPN bagi mengatasi isu keselamatan dan kecuaian ini.
Leave a Reply
Your email address will not be published. Required fields are marked *